பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 திருமந்திரம்

188 சார்ந்தர்க் கின் பங் கொடுக்குந்

தழல்வண் ண ன் பேர்ந்தவர்க் கின்னப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க் கங்கே குரை கழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர்

வாரே. (2114) இறைவனே அன்பால் நினைவார் எய்தும் நலனும் நினே யாதார் அடையும் தீமையும் உணர்த்துகின் ருர் .

(இ - ள்) தீவண்ணனுகிய சிவபெருமான் தன்னே அன்பினுற் சார்ந்து ஒழுகுவார்க்கு இன்பத்தை அருள் வான். தன் திருவருள் வரம்பின் நில்லாது விலகி நடப் பார்க்குத் துன்பமே விளேக்கும் பிறவியைக் கொடுப்பான் . தன்பால் அன்பு மீதுரப் பெற்ருர்க்கு ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியினைக் காட்டி அருள் புரிவான். அவ னது திருவடியாகிய சிவஞானம் சேரப்பெற்றவர்கள் இறைவனே நுணுகிச் சென்று உணர்ந்து இன்புறுவோ rாவார் எ-று.

சார்தல் - இருவகைப்பற்றும் நீங்க இறைவனே அடைக்கலமெனச்சார்ந்தொழுகுதல்; அவனருளல்லாது தாகை ஒன்றையுஞ் செய்ய மை. தீயானது தன்னே மதித்து அகலாது சார்ந்தொழுகுவார் தம் குளிரை நீக்கி நலஞ்செய்தும் தன்னே விலகிஞர்க்குப் பயன் தராதும் அமைதல் போன்று, இறைவனும் அன்பினல் தன்னை அகலாதொழுகுவார்க்கு நடுக்கங்களேந்து நலம்புரிதலும் விலகி யொழுகுவார்க்குப் பிறவிப்பிணியுட்பட்டு வருந்தப் பயன்தரா தொழிதலும் ஆகிய இரு நிலைமையினன் என்பார் தழல் வண்ணன் சார்ந்தவர்க்கு இன்பங் கொடுக்கும், பேர்ந்தவர்க்கு இன்னப் பிறவி கொடுத் திடும் என்ருர் சார்ந்தவர்க்கின் பங்கள் தழைக்கும்