பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

283


என வரும் சிவப்பிரகாசமும் இத்திருமந்திரப் பொருளே அடியொற்றியமைந்தன. நெல்லின் முளே தவிடுமிபோல்? என்னும் இவ்வுவமையில் நெல்லினுள்ளே யுள்ள அரிசி ஆன்மாவிற்கு உவமை. அரிசியைப்பற்றியுள்ள தவிடு ஆணவமலத்திற்கு உவமை. அதன் நுனியிலுள்ள முளே கன்மத்திற்கு உவமை. அதற்கு இடனுகிய உமி மாயைக்கு உவமை என விளக்குவர் சிவப்பிரகாசர்.

"ஆணவம் பிண்டி அருமாயை தான் உமி

காமியம் மூக்கென்று காண் 2

என்பது வீட்டு நெறிப்பால், நெல்லின்உமிபோனல் முளே சீவியாதாற் போலக் கன்மமும் மாயை ஆதாரமாக ஒடுங்கி மீளவும் மாயை ஆதாரமாகச் சீவிக்கும். கன்மமில்லாத போது மாயையும் சீவிப்பற்றுப் போம்? என்பது சிவப்பிர காசருரை. ஆணவம் உமியையும் கன்மம் முளையையும் மாயை தவிட்டையும் ஒக்கும் என உரைகூறுவாருமுளர். நெல்லிற்குமியும் நிகழ் செம்பினிற் களிம்பும், சொல்லிற் புதிதன்று தொன்மையே எனவரும் சிவஞான போத வெண்பாவில் (வல்லி) மாயைக்கு உவமையாக உமியும், ஆணவ மலத்திற்கு உவமையைாகக் களிம்பும் கூறப் படுதல் காணலாம். ஆணவத்துக்குத் தவிட்டினையும் உவமையாகக் காட்டுவர் உமாபதி சிவர்ை.

190. பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களே மேய்க்கின்ற ஆயைெரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல்போடிற் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. (2193)

உயிர்கள் இறைவல்ை உய்திபெறுமாற்றினைப் பிறிது மொழிதல் என்னும் அணியிற்ை புலப்படுத்துகின்றது.