பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 திருமந்திரம்

ஆன்மா, உடம்பு முன் இல்லாதவன்; கலாதியறி வோடு முன் சேர்தல் இல்லாதவன்; புத்தி குணம் எட்டி னேயும் முன் பொருந்தாதவன்; இச்சைமுன் இல்லாதவன் அறிவுமுன் இல்லாதவன்; ஒருதொழிலும் முன் இல்லாத வன் தனக்கென ஒரு சுதந்தரம் முன் இல்லாதவன்; போகத்தில் முன் கொள்கை இல்லாதவன்; தோற்றக் கேடுகள் முன் இல்லாதவன்; ஏகதேசியாதல் முன் இல்லா தவன்; கேவலாவத்தையில் ஆணவ மலத்தோடு மட்டுமே கூடி நிற்பன் என்பது இதன் பொருள்.

குறி என்றது முதனிலேத் தொழிற் பெயராய் இச்சையை உணர்த்தியது. அராகாதி குணம் என்றது தருமம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வரியம், அதர்மம் , அஞ்ஞானம், அவைசாக்கியம், அநைஸ்வரியம் என்னும் புத்தி குணம் எட்டினேயும். அராகாதி குணங்கள் என்ற உபலக்கணத்தால் ஏனேப் போக்கிய காண்டக் கருவிகளுங்

கொள்ளப்படும், 192. உருவுற்றுப் போகமே போக்கியந் துற்று

மருவுற்றுப் பூத மனு தியான் மன்னி வருமச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக் கருவுற்றிடுஞ் சீவன் காணுஞ்

சகலத்தே. (2261) ஆன்மா உடல் கருவி உலகு நுகர்பொருள்களேப் பெற்ற நிலையாகிய சகலாவத்தையின் இயல்புணர்த்துகின்றது.

(இ- ள்) மாயாகாரியமான உடம்பினைப் பொருந்தி எடுத்த உடம்பிற்குரிய போக போக்கியங்களை நுகர்ந்து பூதங்களேச் சார்ந்து மன முதலிய அகக்கருவியோடு நிலைத்து அவற்ருல் வருகின்ற செயல்களைப் பொருந்தி ஓசை முதலிய விடயங்களில் விரும்பித் தங்கிக் கருவுற்றுப் பிறந்தவுயிர் காணப்பெறும் சகலாவத்தையுடையதாகும் ள் - று,