பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£88 திருமந்திரம்

நிலத்து உபதேச குருவாய்க்கப்பெற்று அவரால் திரு வருட் சத்தியாகிய சிவஞானம் கூடப்பெற்றுப் பெரிய குற்றமாகிய ஆணவமலம் நீங்கிப் பிறவாநிலையை அடை தலே சுத்தாவத்தையாம் எ - று.

இத்திருமந்திரத்தை அடியொற்றியது, இருவினைச் செயல்களொப்பின் ஈசன்றன் சத்திதோயக் குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்ளைத் திரிமலமறுத்துப் பண்டைச் சிற்றறிவொழிந்து ஞானம் பெருகிநாயகன் றன் பாதம் பெறுவது சுத்தமாமே? (280) என வரும் சிவஞான சித்தியாராகும்.

இருவினையொப்பின் கண்ணே சிவ சத்தி நிபாதமுறு தலால் குருவருள் பெற்றும் ஞானசாதனம் அடைந்தும் , அநாதி மும்மல நீக்கியும் பழைய வாதனே நீங்கியும் ஞானம்பெருகியும் சிவபிரான் திருவருளேக் கூடுதல் சுத்தாவத்தையாம் என்பது இதன் பொருளாகும்,

சத்தாதி விடயங்களின் விருப்பங் கழிதற்கு ஏது இரு வினே யொப்பு போக போக்கியக் கருவிகளின் செறிவு நீங்குதற்கு ஏது சத்தி நிபாதம். உருக் கழிதற்கு ஏது குரு வருள். பிறந்து திரிதல் கழிதற்கு ஏது ஞான சாதனம். ஏக தேசத் தன்மை கழிதற்கு ஏது மும்மல நீக்கம். சத்தாதி விடய நுகர்ச்சி கழிதற்கு ஏது வாதனே நீக்கம். பாச அறிவிச்சை செயல்கள் கழிதற்கேது ஞானப்பெருக்கம்.

இருவினையொப்பு: ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பு மாதலின்றிப் புண்ணிய பாவம் இரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து, விடுவோனது அறிவின் கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒப்பநிகழ்தல்,

மலபரிபாகம்: மலம் தனது சத்தி தேய்தற்குரிய துனேக் காரணங்களெல்லாவற்ருேடுங் கூடுதல்.