பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

293


தன்னையறிதலாவது தன்னை இறைவனுக்கு அடிமை யென்றுணர்தல். தம்மை யுணர்ந்தார்க்கன்றித் தலைவனே யுணர்தல் இயலாதென்பார் தம்மை யுணர்ந்து தமை யுடைய தன்னுணர்வார்? என்ருர் மெய்கண்டார். தனக்கு-ஆன்மாவுக்கு தன்னேயறிதலால் தனக்கு வருவது ஆன் மலாபமாகிய ஊதியமே யன்றி எத்தகைய நட்டமு மில்லை என்பார், தன்னையறியத் தனக்கொரு கேடில்லே? என்ருர். தன்னியல்பை யறியாமையால் தல்ேவனேயும் அறியப்பெருது ஆன்மசுத்திப் பின்னுளதாம் சிவப்பேருகிய பெரும்பயனையிழந்து ஆன்மாவாகிய தனக்கே கேடு சூழ் கின்றன் என்பார் தன்னையறியாமல் தானே கெடுகின்றன்’ என்ருர். தன்னையறியும் அறிவு என்றது, தன்னையறியும் அறிவாகிய தலைவனே. தன்னையறியும் பொழுதே தான் முதலியல்லன் தனக்கொரு தலைவனுள்ளான் என்பதனே யும் அறிந்து கொள்வானதலின் அத் தலைவனில்லாமல் தானில்லே என்பதனை யுணர்ந்து அவனருளிய சிவ ஞானத்தைப்பெற்று அவனையே வழிபட்டு அவைேடு இரண்டறக் கலந்து என்றும் உளம்ை பெருவாழ்வைப் பெறுவான் என்பார், தன்னை யறியும் அறிவையறிந்த பின் 'தன்னேயே யர்ச்சிக்கத்தானிருந்தானே? என்ருர் . இதன் கண் த்ன்ன? என்றது தன் ஐ-தன் தலைவன்’ என்ற பொருளிலும் ஆளப்பெற்றதாகக் கொள்ள இடமுண்டு. 'தன்னிற்றன்னே யறியுந் தலைமகன் என வரும் (2349) திருமந்திரத்திலும் திருக்குறுந்தொகையிலும் தன்னே? என்பது இப்பொருளிற் பயிலுதல் காணலாம். தன் தலே வனே யறியாமையால் தான் ஒரு முதலுண்டு என்பதனை யறியாமலே ஆன்ம லாப்த்தை இழக்கின்ருன் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். தம்மானை யறியாத சாதியாருளரே! என்ருர் நம்பியாரூரரும். தன் தலைவனே யறிதலால் தன்னையறிதல் என்றது, சிவரூபத்தால் ஆன்ம தரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்மசுத்தியும் பெறுதலே.