பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 திருமந்திரம்

198. அறிவு வடிவென் றறியாத என்னே

அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளா லறிந்தே அறிவு வடிவென் றறிந்திருந் தேனே. (2357)

குருவினருளால் தன்னைச் சித்தென்றறிந்தமை கூறு கின்றது.

(இ-ள்) அறிவுருவே ஆன்மா என்று அறியும் ஆற்ற லில்லாத என்னே என் குருநாதனுகிய நந்தி அறிவே ஆன்மாவினுருவென்னும் உண்மையை அறிவுறுத்தியருளி ன்ை. அவனது திருவருளால் என்னுயிரின் வடிவம் அறிவு என்பதனையறிந்து (இவ்வுண்மையை அறிவுறுத்திய) அம் முதல்வனது திருமேனி ஞானமே என்பதனையுணர்ந்து அறிவே வடிவாகிய அவனுடன் பிரியாது ஒன்றியிருக்கும் நிலையினைப் பெற்றேன் எ - று.

உயிர்க்கு அறிவு வடிவென்று அறிவுறுத்திய இயல்பினை,

ஆறுசுவையும் அருந்தி அவை தம்மை

வேருெருவன் கூறியிடும் மேன்மைபோல்-ஆருறும் ஒன் ருென்ரு நாடியுணர்ந் தோதியதில் உற்றறிவாய் நின்றபொருள் தானேகாண் நீ2 (உண்மை 26)

எனவரும் உண்மை விளக்கத்தா லுணராம்.

போராதி பூதம் நீயல்லை - உன்னிப்

பாரிந் திரியங் கரண நீ ய ல்லை ஆராய் உணர்வு நீ என்ருன் - ஐயன்

அன்பாய் உரைத்தசொல் ஆனந்தந் தோழி? என்ருர் தாயுமாருைம்.