பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

297


என வரும் திருவிருத்தத்தில் அருணந்தி சிவாசாரியார் எடுத்தாண்டுள்ளமை காணலாம். பித்தாந்தம் - பித்தத் தின் முடிந்த நிலை - பெரும்பித்து. பிராந்தி - மயக்கம்.

201 வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனுரல்

ஒதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன நாத னுரையவை நாடி லிரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க்

கபேதமே. (2397) வேதம் ஆகமம் என்பன பொருளொருமையுடையன என் கின்றது.

(இ - ள்) வேதம் ஆகமம் என ஒதும் இறைவனரு ளிய மெய்ந்நூல்கள் முறையே உலகியல் நூலாகிய பொது நூல் எனவும் சைவமாகிய சிறப்புநூல் எனவும் இரு வகைப்பட உள்ளன. இறைவன் வாய் மொழிகளாகிய அவ் விருவகை நூல்களும் இருவேறு முடியினவாதலாற் பேத முடையன என்பர். இறைவனருள் பெற்ற பெரியோர்க்கு அவ் விரு நூற் பொருள்களும் ஒரு தன்மையனவே எ-று.

"வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க ?

எனவும்

உலகியல் வேதநூ லொழுக்க மென்பதும் நிலவு மெய்ந்நெறி சிவநெறிய் தென்பதும்?

எனவும்,

வேதப் பயஞஞ் சைவமும் பேரில்?

எனவும் வரும் சேக்கிழார் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கத் தக்கன.