பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 திருமந்திரம்

அடித்தலையறியுங் திறங்கூறல்

202. காலுந் தலையும் அறியார் கலதிகள்

காலந்தச் சத்தி யருளென்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலையுயிர் காலந்த ஞானத்தைக் காட்ட

வீடாகுமே. (2425) திருவடி வைப்பாம் ஞானதீக்கை யாமாறு கூறுகின்றது.

(இ-ள்) தீக்குணமுடையோர் கால் தலே என்பதன் பொருளறிய மாட்டார். கால் என்பது இறைவனது அரு ளாகிய சத்தி என்பர் (அறிந்தோர்). அவ்வருளாகிய கார ணத்தின் பகுதியினுல் ஆன்மாவில் பொருந்தும் ஞானமே பண்புடைய தலயெனப்பெறும். இறைவனது சத்தியாகிய திருவடி அத்தகைய ஞானத்தை உயிர்க்குக் காட்டியருள அவ்வான்மா வீடுபேற்றிற் குரியதாகும். எ-று.

கால், தாள் என்னும் சொற்கள் இறைவனது திருவரு ளாகிய திருவடியைக் குறிப்பன தலே என்பது, அத் திரு வருளால் ஆன்மாபெறும் சிவஞானத்தைக் குறித்தது.

'கற்றதனு லாய பயனென் கொல் வாலறிவன்

நற்ருள் தொழாஅ ரெனின் ? என்புழித் தாள் என்பது இறைவனது திருவருளேயும் தொழுதல் என்பது அருள் காரணமாகவுள தாம் ஞானத் தோடு ஒன்றுதலேயும் குறிப்பான் உணர்த்தி நிற்றல் அறியத்தக்கதாகும்.

தாள் தந் தளிக்குத் தலைவனே சற்குரு தாள் தந்து தன்னை யறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவா தீதச் சதாசிவன் தாள் தந்து பாசத் தணிக்குமவன் சத்தே . (2049)