பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

299


எனவரும் திருமந்திரமும் இங்கு நினேக்கத்தகுவதாகும் ,

  • தருவா யெனக்குன் திருவடித் கீழோர் தலைமறைவே? என்பது அப்பர் அருள் மொழி.

203. சிந்தையி னுள்ளே எந்தை திருவடி

சிந்தையும் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னே யறியகி லானுகில் எந்தையை யானும் அறியகிலேனே. (2428) இதுவும் அது.

(இ~ள்) என் நெஞ்சத்தினுள்ளே எம்பெருமானது திருவடி நிலே பெற்றுளது. எனவே அது காரணமாக என் நெஞ்சமும் எம்பெருமானது திருவடிக்கீழ்ப் பெர்ருந்தி நில்ே பெற்றுளது. என் தந்தையாகிய இறைவனும் எளியேன் உய்திபெற வேண்டும் என்னும் திருவருட் குறிப்பினை உளங் கொளானுயின் எந்தையாகிய இறைவனே ஞானமிலா தேகிைய யானும் நினைந்து உய்திபெறுதற்கு இயலாதவன வேன். எ-று.

என்னையேதும் அறிந்திலன் எம்பிரான் தன்னநானும் பிரானென் நூறறிந்திலேன் என்னைத் தன்னடியா னென்றறிதலும் தன்னை நானும் பிரானென் றறிந்தேனே. என்பது திருக்குறுந்தொகை.

முக்குற்றம்

204. காமம் வெகுளி மயக்க மிவைகடிந்

தேமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி ஒமெனும் ஒசையி னுள்ளே யுறைவதோர் தாம மதனத் தலைப்பட்ட வாறே. (2436)