பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 திருமந்திரம்

தலைமேலுளதெனப்படும் மீதானமாகிய அரியகுளத்தில் மலர்ந்த தாமரைப்பூவே இறைவன் விரும்பி யணியத்தக்க நறும் பூவாகும் என்பதாம். மனத்தகத்தான் தலைமே லான்’ எனவும் அப்பூதி குஞ்சிப்பூவாய் நின்ற சேவடி யாய் எனவும் வரும் அப்பர் அருள் மொழிகள் இங்கு ஒப்பு நோக்கியுணரத்தக்கன.

205. வினேயா லசத்து விளேவ துனரார்

வினே ஞான ந் தன்னில் வீடலுந் தேரார் வினேவிட வீடென்னும் வேதமும் ஒரார் வினேயாளர் மிக்க விளேவறி யாரே, 2557]

வினே நீக்கமே மெய்யுணர்வு பெறுதற்கும் வீடுபேற்றிற்கும் வழிசெய்யும் என்கின்றது.

(இ-ள்) வினைத் தொடர்பு உள்ள வரையும் அதனல் வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றி நிகழும் விபரீத வுணர்வும் ஆகிய அசத்துக்கள் விளையும் என்பதனை உணரமாட்டார்.மெய்யுணர்வுடைய ஆசிரியன்அருள் பெற்ற வழி வினேயொழிந்துபோம் என்பதனையும் உணரமாட்டார். வினேயொழியவே பாசங்களினின்றும் விடுபடுதலாகிய வீடு பேறுளதாம் என்னும் மெய்ந்நூற் பொருளையும் ஒதியுணர்ந் திலர். வினைத்தொடர்பிற் பட்டோர் வினைகாரணமாக வுளவாம் மிக்க துன்ப விளேவினே அறியமாட்டாராயினர் எ- று.

உடம்பின்கண்ணதாகிய பிராரத்த வாசனை உயிரைத் தாக்குவதாக உள்ள அளவும் அதல்ை வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றிக் காட்சிப்படும் மண்முதல் மாயைகளும் அவைபற்றி நிகழும் விபரீத வுணர்வும் ஆகிய அசத்துக்கள் நீங்கியவழியும் மீண்டும் உயிரை வந்துகூடும் இயல்பின ஆதலால் அதற்கெல்லாம் மூலமாகிய