பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

305


207, அறிவறி யாமை யிரண்டு மகற்றிச்

செறிவறிவாய் எங்கும் நின்ற சிவனப் பிறிவறியாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே. (2580)

மகாவாக்கியப் பொருளாகிய சிவத்தினைத் தரிசிக்குமாறு உணர்த்துகிறது .

(இ - ள்) (சுட்டு அறிவாகிய சகலாவத்தையும் (எத னேயும்) அறியாமையாகிய கேவலாவத்தையும் ஆகிய இரண்டினேயும் (சிவஞானத்தினுல்) நீக்கி (பொருள்தோ றும்) செறிவுடையதாய் அறிவேயுருவாய் எங்கும் நீக்க மறக் கலந்து நின்ற சிவபெருமானே ஆன்மபோதத்தால் வேருக நின்றுணராது அவனருளோடு ஒன்றியிருந்து எம் முயிர்க்குயிராய பெருமான் என்று அன்பிற்ை பேணிப் போற்றும் அருளாகிய இலக்கினையுணராதவர்கள் சிவபரம் பொருளேக் கண்டுகொள்ளும் திறமறியாதார் எ - று.

ஆசிரியனது அருள் நோக்கத்தால் இருவகைப் பாச மும் நீங்கிக் கேட்கும் முறையில் கேட்டுச் சிந்திக்கும் முறையிற் சிந்தித்து அன்புசெய்து அருள் வழியடங்கி நிற்கும் இயல்பினர்க்கு இறைவனியல்பு கேட்கும் காலத் துப் பொருட்டன் மை பற்றிப் பேதமாய்த் தோன்றியும், சிந்திக்குங் காலத்துக் கலப்புப் பற்றி அபேதமாய்த் தோன்றியும், தெளிந்த பின்னர் இவ் விரண்டு மின்றி நுண்ணியனும் பரியனுமாயதோர் முறைமை பற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றிலுந் தோய்வில ய்ைப் பேதாபேதமாய்த் தோன்றியும் நிற்கும் அம்முதல் வனது தன்மை இனிது விளங்கும் என இவ்வாறு தெளிதலின் இயல்பினை விளக்குவது,