பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

307


வாய்மைப் பொருளே யுணராதார் வாழ்விற் பயனெய்தார் என்கின்றது.

(இ-ள்) எல்லாப் பொருளேயும் இருந்தாங்கே ஒருங்கு உணரவல்ல சிவஞானத்தினைக் கைவிட்டு உலகநூல்கள் எல்லாவற்றையும் அறிந்திருப்பினும் அந் நிலேயில் அக் குறை யறிவால் உயிர்கள் பெறும் ஊதியம் ஒன்றுமில்லே . எல்லாப் பொருள்களேயும் ஒருங்கே யறிந்த ஞானப் பொருளாகிய இறைவனைச் சிவோகம் பாவனே செய்யின் அங்ங்னம் தியானித்த ஆன்மா எல்லாவற்றையும் முற்றவுணர்ந்த இறைவனே டு இரண்டறக் கலந்து ஒன்ரும் அத்துவித நிலையினேப் பெறும். எ-று.

'தூஉய்மையென்பது அவாவின்மை மற் றது வாஅய்மை வேண்டவரும் என்றர் திருவள்ளுவர். எல்லாம் அறியும் அறிவு என்றது சுட்டிறந்து உணர்தற் கேதுவாகிய சிவஞானத்தினே. எல்லாம் அறிந்தும்-உலகநூல்களெல்லா வற்றையும் கற்றறிந்தும். இலாபம்-ஊதியம். எல்லாம் அறிந்த அறிவு என்றது, ஞானத்திரளாய் நின்ற பரம் பொருளே. நான் என்றல்.அது நான் ஆனேன் என ச் சிவோகம் பாவனை செய்தல். வாய்மையாகிய பரம்பொரு ளின் அருள் ஞானம் பெருதார் ஏனே உலகநூல்கள் எல்லா வற்றையும் ஒருங்குணர்ந்தாராயினும் ஒன்றுமுனர்ாதார் என்பதும், அருள் ஞானம்.உணர்ந்தார் ஏனையுலக நூற்கல்வி சிறிதுமிலராயினும் எல்லா முணர்ந்தாராவர் என்பதும் உ ண ர் த் தி ய வ ர று. 'கற்ற தலைாய பயனென்கொல் வாலறிவன், நற்ருள் தொழாஅ ரெனின் என்பது திருவள்ளுவர் வாய்மொழி. 'கலேமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கடியேன்” என்றதும் இக்கருத்தினதே.