பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 திருமந்திரம்

ஞானிசெயல்

209. தன்னே யறிந்திடுந் தத்துவ ஞானிகள்

முன்னே வினேயின் முடிச்சை யவிழ்ப்பர்கள் பின்னே வினேயைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே (2611)

சிவஞானிகளின் செயலுணர்த்துகின்றது.

(இ-ள்) தம் சென்னியில் திருவடி சூட்டி உபதேசித் தருளிய சிவகுருவின் அருள் ஞானத்தால் தன் முதல்வன கிய இறைவனே இடைவிடாது தியானிக்கும் மெய்யுணர் வினராகிய சிவஞானிகள், நெடுங்காலமாகத் தங்களேத் தொடர்ந்து பிணித்துள்ள பழவினைத் தொடக்காகிய பிணிப்பை அவிழ்த்துக் களே வார்கள். உடம்பு முகந்து கொண்ட பிராரத்த வினையை நுகரும்பொழுதே அவற்றி லுள்ள விருப்பு வெறுப்புக்களாகப் பின்வந்து சேரும் ஆகாமிய வினையையும் நுண்ணிதிற்பற்றிப் பிசைந்து பொடியாய்ச் சிதர்ந்தழியச் செய்வார்கள் எ-று

தன் என்றது தலைவனுகிய இறைவனே . அறிதல். இடைவிடாது தியானித்தல், சென்னியில் வைத்த சிவன் அருள் என்றது, இறைவன் குருவாய்த் தோன்றிச் சென்னி யில் திருவடி சூட்டியளித்த திருவடி ஞானத்தை.

'பொய்ம்மாயப் பெருங் கடலிற் புலம்பாநின்ற

புண்ணியங்காள் தீவினை காள் ........ ...... எம்மான்றன் அடித்தொடர்வான் உழிதர் கின்றேன் இடையிலேன் கெடுவீர்கள் இடறேன்மின்னே?