பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 திருமந்திரம்

யோதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்’ (திருக்குறள்-341)

ஈசனோடு உளதாம் ஆசையாவது, ஈசனே வழிபடுதல் காரணமாக உலகப்பொருள்கள்மேல் வைக்கும் பற்று.

பத்தியுடைமை

இறைவன்பாலும் அவனடியார்பாலும் அன்புடையராதல். 211 அடியார் அடியார் அடியார்க் கடிமைக்

கடியனுய் நல்கிட் டடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட அடியான் இவனென் றடிமை

கொண்டானே. (26.24)

அடியாரடியார் அடியார்க்கு அடிமை பூண் டொழுகுவோரே இறைவனது திருவருளுக்குரியராவர் என்கின்றது.

(இ - ள்) இறைவன் தன் திருவடிக்கு அன்புடையராய அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடித்தொண்டு செய்தற்குரிய அடியய்ை என்னேத் தந்தமையால் தனக்கே யன்றி அவ்வடியவர்க்கும் அடித்தொண்டு பூண்டேன். யான் அத்தகைய அடியவர்களின் திருவருளால் இறை வன் திருவடியிற்சார, இவனே என் அடியன தற்குத் தகுதி யுடையான் என்று எளியேனேயும் தன்னடியவனுக இறை வன் ஏற்றருளினன் எ - று.

நல்கிட்டு - நல்கிட, செய்தெனெச்சம்காரணப் பொரு ளில் வந்தது . அடியார்க்கு வழிவழி அடிமையாதல் என் li ĝi இறைவனருளாற் கிடைக்கும் பெரும்பேறென்பதும் அத்தகைய தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணிய