பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 2 திருமந்திரம்

(இ-று) சுட்டுணர்வாகிய குறைவுடைய அறிவினையே அறிவு அறிவு என்று சொல்லி அரற்றுவர் உலகத்தார். அறிவு இத்தகைய தென்பதனையும் அறியாமை இத் தகைய தென்பதனையும் அவருள் யாரும் அறியமாட்டார். அறிவும் அறியாமையும் விரவிய தம் நிலே யைக் கடந்து அறிவே யுருவாகிய சிவத்தின் வழி யடங்கிநிற்பாராயின் அவர்தம் சுட்டறிவினல் அறியாமையாகிய தற்சேட்டை கெட நிற்கும் நிலே மிகவும் சிவப்பிரகாசமாகிய பேரழகினை த் தருவதாம் எ - று.

அறிவு என்றது, கருவிகளின் நீங்கிச் சிவஞானத்தினுல் முற்றிலும் அறிவே விளங்கப்பெறும் சுத்தாவத்தையினே . அறியாமை என்றது, கருவிகளுடன் கூடாமையால் ஒன் றும் விளங்காமையாகிய கேவலாவத்தையினே. அறிவறி யாமை என்றது, அறிவும் அறியாமையும் விரவிய சகலா வத்தையின. அறிவாதல் சுத்த அறிவாகிய சிவஞானத் துடன் பொருந்துதல். அறிவு அறியாமை என்றது சுட் டுணர்வாகிய அறிவினல் அறியாமை; என்றது ஓங்குனர் வாகிய சிவஞானத்துள் ஒடுங்கித் தற்போதம் கெடுதல்.

ஒன்பதாங் தந்திரம்

இது, தச காரியத்துள் ஒன்ருகிய சிவபோகம் என்னும் பேரின்ப நிலையை விளக்கும் முறையில் அமைந்துளது. இங்குச் சிவபோகம் என்றது, உயிர் சிவயோகத்தாற் சிவத்துடன் கூடிய நிலையில் தன்னமறந்து சிவனது பேரருளில் திளைத்து இன்புறுதலாகிய சிவ சாயுச்சிய நிலே யின. இவ்வொன்பதாந் தந்திரம் குருமட தரிசனம் என் பது முதலாகச் சர்வ வியாபி என்பதீருக இருபத்திரண்டு உட் பிரிவுகளே யுடையது. இதன் கண் கூறப்படும் குருமட தரிசனம், ஞானகுரு தரிசனம், திருக்கூத்துத் தரிசனம், ஆகாசப்பேறு, ஞாைேதயம், சத்திய ஞானனந்தம்,