பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

313


சோரூப உதயம், சிவதரிசனம், சிவருப தரிசனம் என்னும் பகுதிகள் சிவயோகியர்களின் அநுபவ நிலே யைக் குறிப்பன. பிரணவ சமாதி, துரல் சூக்கும அதிசூக்கும பஞ்சாக்கரங் கள், மோனசமாதி என்னும் பகுதிகள், எல்லாப் பொருள் களேயுந் தன்னகத்தே அடக்கியுள்ள திருவைந்தெழுத்தினே அவ்வத் தானங்களில் வைத்துத் தியானிக்கும் நிலேயில் சிவபோகத்து அழுந்துந் திறத்தினைத் தெளிய விளக்குவன. இப்பகுதிகளிற் கூறப்படும் நுட்பங்கள் உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன் முதலிய ஞான நூல்களில் எடுத்தாளப் பெற்றன. திருக்கூத்துத் தரிசனம் என்ற பகுதி சைவத்தின் மிகச் சிறந்த நுண்பொருள்களே விளக்கு வது. இதிற் கூறப்படும் சிவானந்தக் கூத்து என்பது சிவஞானிகள் என்றும் தம் மெய்யுணர்விற் கண்டுகளிக்கும் ஆனந்தக் கூத்தாகும். இதனை

  • அண்ணலார் தமக்களித்த மெய்ஞ்ஞானமே யான

அம்பலமுந்தம் உண்ணிறைந்த ஞானத்தெழும் ஆனந்த ஒருபெருந்

திருக்கூத்தும் பெரிய-ஞான-150)

என்பர் சேக்கிழார்.

  • குறியொன்று மில்லாத கூத்தன்றன் கூத்த என்பர் வாதவூரடிகள் . பக்குவமுடைய சிவஞானிகளுக்குச் சிறப்பு முறையில் அவர் தம் மெய்யுணர்வில் நின்று நிகழ்த்தப் பெறும் இத்திருக்கூத்தினை யன்றி, உலகவுயிர்கள் யாவும் நலம்பெற் றுய்தல்வேண்டும் என்னும் பொது நிலயில் இறைவல்ை நிகழ்த்தப் பெறுந் திருக்கூத்து சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லேக் கூத்து, அற்புதக் கூத்து என்னும் தலேப்புக்களில் இத்தந்திரத்தில் விரித் துரைக்கப்பெற்றுளது. இதன்கனுள்ள சூனிய சம்பாஷணை என்ற பகுதி, உணர்தற்கரிய நுண்பொருள்களைக் கேட் போர் எளிதின் மனங்கொள்ளும்படி உருவகவாய்பாட்டால்