பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3f4 திருமந்திரம்

பிறிது மொழிதல் என்னும் அணிநலமமைய மறைத்துக் கூறும் முறையில் அமைந்துளது. இதன் இறுதியிலுள்ள வரையுறைமாட்சி, அணந்தோர் தன்மை, தோத்திரம், சர்வ வியாபி என்னும் தலைப்பிலமைந்த திருமந்திரப் பாடல்கள், பசுகரணங்களெல்லாம் சிவகரணங்களாகப் பெற்றுச் சிவபோகத்தில் திளைத்து இன்புறும் அருளாளர் களாகிய சீவன் மூத்தர்களது இயல்பினைப் புலப்படுத்துவன.

ஞானகுரு தரிசனம்

213. ஆயன நந்தி ய்டிக்கென் தலைபெற்றேன்

வாயன நந்தியை வாழ்த்தவென்

வாய் பெற்றேன் காயன நந்தியைக் காணவென்

கண் பெற்றேன் சேயன நந்திக்கென் சிந்தை

பெற்றேனே. (2658)

ஞானகுரு வைத் தரிசித்தற் கேற்ற முறைமையும் சாதனங் களும் ஆமாறு உணர்த்துகின்றது.

(இவள்) ஈன்ற தாயினைப் போன்ற பேரன்புடைய நந்தியாகிய எனது குருவின் திருவடியை வணங்குதற் கெனவே அவனருளாற் சென்னியைப் பெற்றுள்ளேன். வாழ்த்துவார் வாயின்கண் எழுந்தருள் வாகிைய நம் நந்தியை வாழ்த்து தற்கெனவே என் வாயினைப் பெற்றுள் ளேன். என் உடம்பிடத்தாகிைய நம் நந்தியைக் கண்டு மகிழ்தற்கெனவே கண்களைப் பெற்றுள்ளேன். எல்லாவற் றுக்கும் அப்பாற்பட்டுச் சேய்மையிடத்தாளுகிய நம் நந்தியைச் சிந்தித்தற்கெனவே திருந்திய சிந்தையைப் பெற்றுள்ளேன். எ.று.