பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 திருமந்திரம்

214. கருடன் உருவங் கருது மளவிற்

பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவங் குறித்த அப்போதே திரிமலந் தீர்ந்து சிவனவ ளுமே. (2659)

ஞானகுரு தரிசனத்தா லுளதாம் பயன் உணர்த்துகின்றது.

(இ - ள்) மந்திர வுருவினதாகிய கருடனது வடிவினே மாந்திரிகன் தனது வடிவாக ஒன்றித் தியானிக்கு மளவிற் பெரிய நஞ்சு தீர்ந்து மரணபயங் கெட்டொழியு மாறு போன்று குருவின் திருமேனியைக் கண்டு தியா னித்த அப்பொழுதே மும்மல அழுக்கு தன்னை விட்டு நீங்க அம்மாணவன் சிவமாந்தன்மையினே அடைந்து இன்புறு வன் எ - று.

கருட தியானத்தால் விடம் நீங்க மரணபயந்தவிர்தல் போல் குருவைத்தரிசித்துச் சிவமாகத்தியானிக்கும் பாவகத் தால் மும்மலம் நீங்கச் சிவனுடன் அத்துவிதமாந் தன்மை யைப் பெறுவன் என்பதாம். ஆதிபெளதிகம், ஆதி தைவி கம், ஆதியான்மிகம் எனக் கருடன் மூவகைப்படும். உலகத் திற் காணப்படும் கருடன் ஆதி பெளதிக,கருடன் . அதற்கு அதிதெய்வமாய் மாந்திரிகன் உள் ளத்தில் அதுபோல் வைத்துத் தியானிக்கப்படும் மந்திர ரூபமாகிய கருடன் ஆதி ைதவிக கருடன், அம்மந்திர ரூபமே தானுக தன் னறிவு அதன் வயத்ததாம்படி உறைத்து நிற்குமாறு ஒன் றித் தியானிக்கும் பாவனே கருட பாவனையாகும். அம் மந்திரம் இடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப் பதாகிய சிவசத்தி ஆதியான்மிக கருடன் எனப்படும். சுட்டியுணரப்பட்ட பிரபஞ்சத்தை இது சத்தன்று இது சத் தன்று என ஒரோவொன்ருக வைத்து நோக்கி, அவ் வாறு கண்டுணர்ந்த தன்னறிவின் கண்ணே சுட்டுணர் வின்றி அண்ட முதலாய் நின்ற இறைவனே ஆராய்ந்து