பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

317


அவன் நான் எனப் பாவிப்பாகுயின் அப்பாவனையால் அத்து விதமாய் விளங்கித் தோன்றும் முதல்வனல், அனுதி யாய்க் கூடி நின்ற சுட்டுணர்வாகிய பொதுவியல்பினைத் தான் விட்டு நீங்குமாறு, ஒள்ளிய கருட தியானித்தில் விளங்கித் தோன்றும் கருடனல் அப்பாவகன் விடத்தைத் தீர்த்துக்கொள்ளுமாறு போலாம் என்பார்,

கண்டதை யன்றன் றென விட்டுக் கண்டசத்தாய் அண்டனை யான்மாவி லாய்ந்துணரப் - பண்டணைந்த ஊனத்தைத் தான் விடுமா றுத்தமனின் ஒண்கருட சா ன த்தில் தீர்விடம்போல் தான் ? என்ருர் மெய்கண்டதேவர். கண்டவி ைவயல்லேன் என வரும் சித்தியார் கருத்தும் இதுவே.

சூக்கும பஞ்சாக்கரம்

215. சிவனரு ளாய சிவன் திரு நாமஞ்

சிவனரு ளான் மாத் திரோத மலமா(ம்)யை சிவன் முதலாகச் சிறந்து நீ ரோதப் பவம தகன்று பரசிவ ேைம. (2711)

சூக்கும! வைந்தெழுத்தின் இயல்பினேயும் அதனை விதிப்படி

ஒதுவார் பெறும் பயனேயும் உணர்த்துகின்றது.

(இ - ள்) இறைவனது திருவருளாகிய ஞான நட னத்தை யுணர்த்தும் திருப்பெயராகிய திருவைந்தெழுத் தில் சிகரம் இறைவனையும் வகரம் அருளாகிய சத்தியினை யும் யகரம் உயிரையும் நகரம் (அதனை மறைத்த) திரோ தான சத்தியையும் மகரம் ஆணவ மலத்தையும் குறிப்பன. நீவிர் (அவ்வைந்தெழுத்தின் பொருளேயுணர்ந்து) சிகர முதலாகச் சிறப்புடன் ஒது வீராயின் நும்முயிர் பிறவித்துன் பத்தின் நீங்கிப் பரம்பொருளாகிய சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்ரும் எ - று.