பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 3.19

216. சிவசிவ வெ ன் கிலர் தீவினே யாளர்

சிவசிவ வென்றிடத் தீவினே மாளும் சிவசிவ வென்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ வென் னச் சிவகதி தானே. (2716

திருவைந் தெழுத்தினை ஒதாதாரது இழிவும் ஒதுவார் பெறும் பயனும் உணர்த்துகின்றது.

(இ-ள்) முன்னத் தீவினைத் தொடக்கிற்பட்டோர் சிவசிவ எனத் திருவைந்தெழுத்தினை ஒதவல்ல உணர்வில ராயினர். சிவசிவ எனக் காதலாகிக் கசிந்து ஒதுவாராயின் அன்னே ர்ைப்பற்றிய எல்லாத் தீவினைகளும் மாய்ந்தொழி யும். சிவசிவ என ஒதுதலால் ( இன்பமே எந்நாளும் துன்ப மில்லே! என்றவாறு இன்பமே நுகரும்) தேவருமாவார்கள். சிவசிவ என்று இடைவிடாது ஒதச் சிவகதியாகிய வீடு பேறு தானே வந்தடையும் எ-று.

திருவைந் தெழுத்தின் சிறப்புணர்ந்து ஒது தற்கும் முன்னத் தவம் வேண்டுமென்றும் அவ்வாறு ஒதும் உணர் வினேத் தடுத்து நிற்பது முன்னேத் தீவினே யென்றும் உணர்த்துவார் , தீவினே யாளர் சிவசிவ என்கிலர் ? என் கிருர் என்கிலர்-என்று ஒதும் ஆற்றலப் பெற்றிலர். திருவைந் தெழுத் தோது தலால் பாசநீக்கமும் சிவப் பேறும் உண்டாம் என்பது கருத்து .

அதி சூக்கும பஞ்சாக்கரம்

217. சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி

அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ வென்றென்றே சிந்தை அவாயங் கெடநிற்க

ஆனந்தமாமே. (27.18)