பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 திருமந்திரம்

அதிசூக்கும வைந்தெழுத்தின் அமைப்பும் அதனை ஒது தலால் வரும் பயனும் உணர்த்துகின்றது.

(இ-ள்) சிவாயநம வென்னும் திருவைந்தெழுத்தின் துணையால் சித்தத்தை ஒருவழிப்பட நிறுத்தித் தற்போதத் தால் உளவாம் அச்சம் அறவே யொழிய (திரோதமலங் களே யுணர்த்தும் நம என்பதனை விலக்கி) ஆன்மாவை இறைவனுக்கு மீளாவடிமையுடையதாக்கிச் சிவாய சிவ சிவ என்று இவ்வாறு திருவைந் தெழுத்தைச் சிந்தையில் எண்ணித் தற்போதத்தால் உண்டாம் அச்சமகலச் சிவபரம் பொருளே ஒன்றியுணர்தலால் சிவானந்தமாகிய பேரின்பம் விளையும் எ-று.

ஆன்மா ஆணவமலமாகிய குற்றத்துடன் கூடிய நகரத்

திற்கும் அருளாகிய வகரத்திற்கும் இடையே நிற்கும் நிலை யினையுணர்த்தும் முறையில் அமையாது, யகரமாகிய உயிர் வகரமாகிய அருளினலே அவ்வகரத்திற்கும் சிகரமாகிய சிவத்திற்கும் இடையே நிற்கும் தூய நிலையினே யுணர்த்து வது சிவாயசிவ என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரமாகும் என்பது குருமுகமாகத் தெளியத்தக்கதாகும். இந் நுட் பத்தினே,

‘ஆசினவா நாப்பண் அடையா தருளினுல்

வாசியிடை நிற்கை வழக்கு: (89)

என வரும் திருவருட் பயன் உணர்த்துகின்றது.

உடையாள் உன்றன் நடு விருக்கும்

உடையாள் நடுவுள் நீயிருத்தி

அடியேன் நடுவுள் இருவிரும்

இருப்பதாகுல் அடியேனுன்

அடியார் நடுவுள் இருக்கும்

அருளைப்புரியாய் பொன்னம்பலத்தெம்

முடியா முதலே என்கருத்து

முடியும்வண்ணம் முன்னின்றே??