பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 திருமந்திரம்

சிவானந்தக் கூத்து 219. பூதங்கள் ஐந்திற் பொறியிற் புலனேந்தில்

வேதங்கள் ஐந்தின் மிகுமாகமந் தன்னில் ஒதுங் கலேகாலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்திற் புணர்ந்தாடுஞ்

சித்தனே, (2730) இதுவும் அது.

(இ - ள் எல்லாம்வல்ல சித்தகிைய சிவபெருமான், ஐம்பெரும் பூதங்களிலும், அவையிடமாக அறிதற்கு வாயில் களாகிய ஜம்பொறிகளிலும், அப்பொருள்களின்வழி நிகழும் ஐம்புல நுகர்வுகளிலும், வேதங்களின் மெய்ப்பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்திலும், வேதத்தின் மிக்க ஆகமங்களிலும் ஒதியுணரத்தக்க கலேகளிலும், உயிர்களின் நுகர்ச்சியை வரையறுக்கும் காலத்திலும் , அதன் எல்லே யாகிய ஊழியிலும், அண்டத்துணர்வாகிய சுவை முதலிய ஐந்திலும் வேறறக் கலந்து நின்று திருக்கூத்தினே இயற்றியருள் கின்ரு ன் எ - று.

சித்தன் ஐந்திற் புணர்ந்து ஆடும் என இயையும். புணர்தல் - வேறறக் கலத்தல். நிலம் நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன், புலனுய மைந்தைேடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்ருன் என்பது திருவாசகம். இத் திருக்கூத்தின் இயல்பினே,

"பூதங்கள் ஐந்தாகிப் புலணுகிப் பொருளாகிப்

பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே ? எனத் திருவாதவூரடிகள் கண்டு போற்றிய திறம் இவண் கருதத் தகுவதாகும்.

‘என்னத்தன் ஆடல்கண்டு இன்புற்றதால் இவ்விரு நிலமே 2 (4-81 -9)