பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

323


என அப்பரடிகளும் ,

'வானந்தம் மண்ணி னந்தம் வைத்து வைத்துப் பார்க்க எனக்கு, ஆனந்தந் தந்த அரசே பராபரமே 2 எனத் தாயுமாருைம் அருளிய பொருளுரைகள் இங்குக் கருதத்தக்கன. * & o

சுருதரககூதது 220. அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பால்

உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேற் கண்டங் கரியான் கருணை திருவுருக் கொண்டங் குமை காணக் கூத்துகந்

தானே. (2732) இறைவனது அழகிய திருக்கூத்தின் தன்மையினே விளக்குகின்றது.

(இ - ள்) ஏழண்டங்களுக்கு அப்புறத்தும் அதற்கு அப்பாலும் விரிந்துள்ளது ஒன்று உண்டு என்று கூறப்படும் சத்தியாகிய திருவருள் சதாசிவ தத்துவத்தின் உச்சியின் மேல் விளங்க அங்கு நீலகண்டனுகிய சிவன் கருணையே திருவுருவாகக்கொண்டு உமையம்மையார் கண்டு களிக்க அழகிய திருக்கூத்தினை விரும்பிப் புரிந்தருள்கின்ருன் , எ-று இறைவனது அருளாகிய சத்தி ஏழண்டங்களுக்கும் அப்புறத்து அப்பால் கடந்துவிள்ங்குவது என்பார், 'அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால் உண் டென்ற சத்தி என்ருர், ஏழண்டத் தப்பாலான்’ என்பர் திருநாவுக்கரசரும். சதாசிவத்து உச்சி என்றது, சதாசிவ தத்துவத்தையுங் கடந்த திருவருள்மயமான நிலையினே. இத் திருமந்திரப் பொருளே விரித்து விளக்கும் முறையில் அமைந்தது ,

கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி அற்புதக் கோலம் நீடி யருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றும் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றிபோற்றி .