பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 3.25

சேணிற் பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் (திருக்கோவையார் - 23) எனப் போற்றுவர் மணிவாசகர்.

பொற்றில்லைக் கூத்து 222. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலே

கூரும் இமவானின் இலங்கைக் குறியுறும் சாரும் திலேவனத் தண்மா மலயத்து டேறும் சுழுனே யிவை சிவபூமியே. (2747) பொற்பதியாகிய தில்லை உலகபுருடனின் இதய கமலமாய் இடை பிங்கலே சுழுமுனே என்னும் மூன்று நாடிகளும் சந்திக்கும் இடமாய் இறைவனது ஆடல் நிகழும் திருத் தலம் என உணர்த்துகின்றது .

(இ - ள்) (உலகமாகிய புருடனுக்கு) மேருமலே நடு நாடியாகும். மிகுந்த இடைநாடியும் பிங்கலே நாடியும் ஆக முறையே உயர்ச்சிமிக்க வட இமயமும் தென்னிலங் கையும் அமையத் தில்லேவனம் இவற்றின் இடையே சார்ந்துளது . சுழுமுனநாடி தில்லைக்கும் குளிர்ந்த பொதிய மலேக்கும் ஊடாக ஏறிச்செல்லும் ஆதலின் இவை சிவபூமியெனப் போற்றத்தகும் தெய்வத்தலங்க ளாம் எ - று.

அற்புதக் கூத்து இறைவன் செய்யும் ஞானமயமான திருக்கூத்தின் இயல்பினை விரித்துரைக்கும் பகுதி. 223. நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்ருய்ப் பரம னிருந்திடம் சிற்றம்பல மென்று தேர்ந்து கொண்

டேனே. (2770) அற்புதத் திருக்கூத்தினைத் தாம் கண்டு தரிசித்த திறத்தை அருளிச் செய்கின்ருர்,