பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

327


"எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே

நட்டம் புதல்வா நவிலக்கேள் - சிட்டன் சிவாய நமவென்னுந் திருவெழுத்தஞ் சாலே அவாயமற நின்ருடு வான்? (31)

என விடையாகவும் வரும் உண்மைவிளக்கத்தால் உணரலாம்.

‘அண்ணலார் தமக்களித்த மெய்ஞ்ஞானமே

யான அம்பலமுந்தம் உண்ணிறைந்த ஞானத்தெழு மானந்த

ஒருபெருந் தனிக்கூத்தும் கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டெழுங்

களிப்பொடுங் கடற்காழிப் புண்ணியக் கொழுந்தனையவர் போற்றுவார்

புனிதராடியபொற்பு ?

என வரும் பெரியபுராணச் செய்யுள் அற்புதத் திருக்கூத் தின் அமைதியினைப் புலப்படுத்தல் காணலாம்.

224. புளிக்கண் டவர்க்குப் புனலூறு மாபோற்

களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் அளிக்கும் அருட்கண்ணிர்சோர் நெஞ்சுருக்கும் ஒளிக்கு ளானந்த வமுதுாறு முள்ளத்தே.

(2778) அற்புதத் திருக்கூத்தினேக் காண்போர் பெறும் இன்பநிலை யினே எடுத்துரைக்கின்றது.

(இ - ள்) சுவைப் புளியினைப் பார்த்தவர்க்குப் பார்த்த அளவிலேயே வாயில் நீர் ஊறுவதுபோலக் களிப்பினே நல்கும் திருக்கூத்தினைக் கண்டவர்க்கெல்லாம் (அத்திருக் கூத்து) அருளேத் தோற்றுவிக்கும்; புறத்தே கண்களிலே ஆனந்தக் கண்ணிச் சொரிய நெஞ்சத்தை நெக்குருகச்