பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 திருமந்திரம்

வரையுறை மாட்சி 231. உரையற்ற தொன்றை யுரைசெயும்

ஊமர் காள் கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை -

யோனே. (2955)

தியான எல்லேயாகிய மேல்நிலையில் இருப்போரது மாண் பினை விளக்குவது.

(இ - று) நால்வகை வாக்குக்களேயும் கடந்து நின்ற ஒப்பற்ற பரம்பொருளே ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுக்க ளாலும் சொல்ல முற்படும் ஊமைகளே! கரைகாணுக் கட லாகவுள்ள அதனே எல்லேப்படுத்திக் கூற இயலுமோ? அலேயடங்கிய நீர்நிலை போன்று சித்தம் தெளிந்துள்ள சிவஞானிகளுக்குக் கட்டமைந்த சடையினே யுடையணுகிய அவ்விறைவன் களங்கமற வெளிப்பட்டிருந்தான். எ-று.

சொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம்

எல்லை சிவனுக்கென் றுந்திபற என்ருல் நாம் என்செய்கோம் உந்தீபற? (29) எனவரும் உய்யவந்ததேவர் வாய்மொழி இங்கு நினைத்தற் குரியதாகும்.

அணைந்தோர்தன்மை 232. ஒழிந்தேன் பிறவி யுறவென்னும் பாசங்

கழிந்தேன் கடவுளும் நானுமொன் ருனேன் அழிந்தாங் கினிவரும் ஆக்கமும்

வேண் டேன்

செழுஞ்சார் புடைய சிவனேக்கண்

டேனே. (2958)