பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

339


அருள் பெருதார் . யானே) பெரிய தேசமும் சிறிய நாடும் ஆகிய எல்லாவிடங்களிலும் தேடித் திரிந்து எங்கள் சேமப் பெருஞ்செல்வகை எளிவந்தருளிய இறைவனே எனது உடம்பாகிய இனிய நாட்டிலேயே அகமுகமாக நோக்கிக் கண் டுகொண்டேன் எ-று.

இறைவன் ஊனக்கண்ணுல் உணரப்படாது மறைந்து நிற்போன் ஆதலால் அவனுக்கு மாயன் என்பது

பெயராயிற்று. மாய்தல் - மறைதல். மாயன் ஆட மலேயான்மகளும் மருண்டுநோக்குமே என்ருர் காரைக்கா லம்மையாரும். மாற்ற மனங்கழிய நின்ற மறையோ

ளுகிய இறைவனே நாடிக் காணுதற்கு மனமாகிய நெடிய தேர் சிறிதும் பயன்படாதென்றும், மனமெனும் விரைந்ததேரில் ஏறி இறைவனேக் காண் முற்பட்டோர் தாம் தேடிய பொருளாகிய இறைவனேக் காணப் பெருமையோடு தாம் சென்ற இடம் இன்னது என்பதனே யும் அறியப்பெருது புலம்பும் நிலேயினராவர் என்றும்: கூறுவார் மாயனே நாடி மன. நெடுந்தேர் ஏறிப் போயின நாடு அறியா தே புலம்புவர் என்ருர், அவர்போல் தேடிக் காணுது புலம்பிய யான் மனத்தின் விரைவொழிந்து. இறைவனே அவனருளே கண்ணுகச் சிவயோக நிலேயில் இருந்து இவ்வுடம்பினுள்ளே அகமுகமாக நோக்கிக் கண்டு கொண்டேன் என்பார், தேசமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனக் காயம் இன் நாட்டிடைக் கண்டுகொண்டேன்’ என் ருர் . காயம் - உடம்பு. தேசம் - பெரியது, நாடு, சிறியது . காயமின்னுட்டிடை? என்பதை மின் காய நாட்டிடை என மொழிமாற்றி விரைந்தழிதலால் மின் னலயொத்த உடம்பாகிய தேசத்து எனப் பொருள் கூறுதலும் உண்டு. திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொணுத் தேவனே என்னுள்ளே தேடிக் கண்டுகொண் டேன்’ என்பது அப்பர் அநுபவ மொழி.