பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 திருமந்திரம்

236. மன்னு மலேபோல் மதவா ணத்தின்மேல்

இன்னிசை பாட இருந்தவ ராரெனின் முன்னியல் கால முதல்வனுர் நாமத்தைப் பன்னினர் என்றே பாடறி வீரே. (2983) இறைவனைத் தோத்திரஞ் செய்வார் எய்தும் பயன் கூறு கின்றது.

(இ- ள்) நிலேபெற்ற மலேபோலும் தோற்றமுடைய மதம் பொருந்திய (பட்டத்து) யானையின் மேல் (மாகதர் முதலியோர்) இன்னிசையாற் பாடித் துதிக்க அரசு வீற்றி ருந்த திருவுடையார் யார் என வினவில், தாம் செயலுடை யராயிருந்த முற்காலத்தே முழு முதற் கடவுளாகிய இறை வனது திருப்பெயர்களைப் பலமுறை சொல்லித் துதித்தவர் களே என்னும் உண்மையை யுணர்ந்து (அம் முதல்வனது பொருள் சேர் புகழ்த்திறத்தினைப்) பாடிப் போற்று வீராக எ-று.

மன்னுதல்-அசைவின்றி நிலைபெறுதல். வாரணம்யானை; ஈண்டுப் பட்டத்து யானே யைக் குறித்து நின்றது. இன்னிசை பாட வாரணத்தின் மேல் இருந்தவர் என இயையும். இயல் காலம்-செயலுடையரா யிருந்தகாலம். முதல்வனர் நாமம்-இறைவர் திருப்பெயர். பன்னுதல்பலமுறை சொல்லித் துதித்தல். பாடு அறிவீர்-பாடுதலேச் செய்வீராக. அறிதல், ஈண்டுச் செய்தல் என்னும் பொருளில் வந்தது. 237, வள்ளற் றலைவனே வான நன் னுடனே

வெள்ளப் புனற்சடை வேத முதல்வனேக் கள்ளப் பெருமக்கள் காண்பர்

கொலோவென்று உள்ளத் தினுள்ளே யொளித் திருந்

தாளுமே. (2994)

வஞ்சனையாளர்க்கு இறைவன் வெளிப்படான் என்கின்றது.