பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 திருமந்திரம்

என்னும்படி எப்பொருளிலும் நீக்கமறக் கலந்து நிற்கின்றன் எ-று.

விண்-ஆகாயம். தண்-தண்மை; குளிர்ச்சி. அது தன்மையின்-அவ்வப் பொருளின் தன்மை அவ்வப் பொருளே விட்டுப் பிரியாதவாறு போல. கானுங் கண்ணுக் குக் காட்டும் உளம்போல் உயிர்கட்குப் பொருளேக் காட்டிக் காணும் நிலையில் கண் போன்று உதவியருளுதல் பற்றிக் கண்ணவனுகிக் கலந்து நின்ரு ன் என்ருர் . இத்திருமந் திரத்தின் சொற்பொருள் அமைப்பினே அடியொற்றி யமைந்தது,

'விண்ணகத்தான் மிக்க வேதத்துளான் விரி நீருடுத்த

மண்ணகத்தான் திருமாலகத்தான் மருவற்கினிய பண்ணகத்தான் பத்தர் சித்தத்துளான் பழநாயடியேன் கண்ணகத்தான் மனத்தான் சென்னியானெங்

கறைக்கண்டனே ? (4-112-5) என வரும் திருவிருத்தமாகும்.

239. உண்ணின் ருெளிரும் உலவாப் பிராணனும் விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின் றியங்கும் வாயுவு மாய் நிற்கும் கண்ணின் றியங்கும் கருத்தவன்

தானே. (3040) உலகுயிர்களின் இயக்கத்திற்குத் துணைசெய்தருளும் இறை வனது திருவருட் சிறப்பினே வியந்து போற்றுகின்றது .

(இ-ள்) கானுந் தன்மையுடைய கண்ணிற் கலந்து. நின்று காணும் உயிர்போன்று உயிரறிவினுள்ளே கலந்து நின்று காணும் உதவியைப் புரிந்தருளும் அவ்விறைவன் உடம்புளே நின்று இயங்கும் கெடாத உயிர்ப்பும் (பிரான லும்) ஆகாயத்திலிருந்து நிலைபெற்று இயங்கி ஒளிவழங்கும்