பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

திருமந்திரம்


பொன்னை யொப்பாகின்ற போதகத் தான், மூவர்க்கு மூத்தவன், தலைமகன், அப்பனும் ஆகுவன் என முடியும். ‘பொன்னை ஒப்பாகின்ற போது’ என்றது, உயிர்களின் உள்ளக் கமலமாகிய பொன்னிற மலரினை. போது-மலர். நெஞ்சத் தாமரையிலே நீங்காது எழுந்தருளியவன் இறைவன் என்பது, ‘மலர்மிசை யேகினான்’ (திருக்குறள்-3) எனத் தெய்வப்புலவரும்

“அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
           றைம்புலனும் அடக்கி ஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
           துள்இருக்கும் புராணர்” (1-132-6)

என ஆளுடைய பிள்ளையாரும்,

“எரியாய தாமரைமேல் இயங்கினாரும்”

(6 16-7)

என அப்பரடிகளும் அருளிய பொருளுரைகளாற் புலனாம். அயன் அரி அரன் என்னும் மூவரையும் தோற்றுவித்து அம்மூவர் வாயிலாக உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்குதலாகிய முத்தொழில்களையும் செய்தருளும் முன்னைப் பழம் பொருளாகத் திகழ்பவன் சிவபெருமான் ஒருவனே எனத் தெளிவிக்கும் முறையில் ‘முன்னையொப்பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்’ என்னார். ‘மூத்தவன் யுலகுக்கு முந்தினானே’ (6-44-1) எனவும்,


“படைப்போற் படைக்கும் பழையோன், படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள் , கரப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்”

(திருவாசகம்-திருவண்டப்-13-16) எனவும்

‘முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே’ (திருவெம்பாவை-9) எனவும் வரும் திருமுறைத்தொடர்கள் இங்கு நோக்கத் தக்கன. ‘தனக்கு உவமை இல்லாதான்