பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

திருமந்திரம்



ஈசன் வெய்யன் தண்ணியன், ஆயினும் (அவனது) அருளறிவார் இல்லை எனவும், தாழ்சடையோன் சேயினும் நல்லன் நல்லன்பர்க்கு அணியன், தாயினும் நல்லன் எனவும் இயைத்துப் பொருள் கொள்க. மன்னுயிர்க்கு உளவாகும் தீமைகளை அழிக்குந் திறத்தில் தான் பற்றிய பொருள்களைச் சுட்டழிக்கும் வெம்மைமிக்க தீயைக் காட்டிலும் வெம்மையுடையவனாகத் திகழ்வோன் ஈசன் என்பார் ‘தீயினும் வெய்யன்’ என்றார். பிறவித் துயராகிய கடுவெயிலிற்பட்டு அல்லற்படும் உயிர்களுக்குக் குளிர்ந்த நீரினுந் தண்மையுடையனாய்த் திருவடி நீழலைத் தந்து அருள்புரியும் அழகிய தண்ணளியினை யுடைமையால் அறவாழி யந்தணனாக விளங்குவோன் என்பார் ‘புனலினுந் தண்ணியன்’ என்றார். ‘சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும் நிழலாவன... ஐயாறன் அடித்தலமே’ (4-92-19) என்பது அப்பரடிகளின் அநுபவ மொழியாகும். இவ்வாறு இறைவன் தோன்றாத் துணேயாயிருந்து தீமையைத் தெறுதலும் நன்மையை அளித்தலும் ஆகிய தனது திருவருட்டிறத்தால் மன்னுயிர்களை முறைசெய்து காத்தருளவும் உலகத்தார் அம்முதல்வனது அருளுபகாரத்தை உள்ளவாறு உணரப்பெற்றிலரே என்பார், ‘ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை’ என இரங்கிக் கூறினார். பின் தாழ் சடையோனாகிய சிவபெருமான், ஒன்றினுந் தோயாது நிற்கும்; தன்னியல்பில் எல்லா வுலகங்களையுங் கடந்து அப்பாற்பட்டுச் சேய்மையிடத்தானாயினும், தன்பால் அன்புடைய அறவோராகிய நல்லோர்க்கு மிகவும் அணுகிய நிலையில் எளிவந்து, பெற்ற தாயினும் இனியனாய் நல்லருள் புரியும் பெற்றியன் என்பார், ‘சேயினும் நல்லன், நல்லன்பர்க்கு அணியன், தாயினும் நல்லன்’ என்று அருளிச்செய்தார். சேயினும்-சேயன் ஆயினும்; சேய்மையிடத்தான் ஆயினும், ‘நனியானே சேயானே’ என நாவுக்கரசரும் ‘நாற்றத்தின் நேரியாய்