பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

33


(இ-ள்) இறைவன், மண்ணுலகத்திலுள்ளாரை ஒத்துத் தோன்றுவான்; விசும்பில் இயங்குவாரை ஒத்துத் தோன்றுவான்; வானுலகத்திலுள்ளாரை ஒத்துத் தோன்றுவான்; வேதத்தின் உட்பொருளாய்த் தோன்றுவான். பண்ணின் கண்ணே இசையுருவாகிப் பண் பொருந்திய தோத்திரப் பாடலில் வெளிப்பட்டருளும் அம்முதல்வனுக்கு, (அவன்) என் கண்ணினுள்ளே நின்று அருளுதலால், அன்பு செய்கின்றேன் (யான்). எ-று.

தன்பால் அன்புடைய அடியார்கள் நினைத்தவுருவில் நினைத்தவிடத்தில் வெளிப்பட்டுத் தோன்றி அருள் செய்தலால் ‘மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும், விண்ணகத்தான் ஒக்கும்’ என்றார். தன்னை அன்பினால் தியானிக்கும் சிவஞானிகளுக்கு அறிவுநூல்களின் பொருளாய் அவர்தம் உள்ளத்தே வெளிப்பட்டருளுதலால் ‘வேதகத்தான் ஒக்கும்’ என்றார். வேதத்து அகத்தான் எனற்பாலது வேதம் என்பதன் அம் கெட்டு வேதகத்தான் என வந்தது. பண் அகத்து இன்னிசை யுருவின‍னாகிப் பாடலில் உற்றான் எனவிரிக்க. அன்புநெறியாகிய பத்தி நெறியில் நின்று இறைவனைப் பண்ணமைந்த பாடல்களாற் பரவிப் போற்றுவார்க்குப் பத்திமைப் பாடலின் கண்ணே இசை யுருவாகி இறைவன் வெளிப்பட்டருள் புரிவன் என்பது,

‘பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி’ (6–55-7)

‘பாட்டான நல்ல தொடையாய் போற்றி’ (6–57-1)

‘பண்ணும் பதமேழும் பலவோசைத் தழிழவையும்
உண்ணின்ற தொர்சுவையு முறுதொலி பலவும் ..
விண்ணும் முழுதானான்’ (1-11-4)

‘பாட்டகத் தின்னிசை யாகி நின்றானை’ (7-62-3)

‘ஏழி சையாய் இசைப் பயனாய்’ (7-51-10)