பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

திருமந்திரம்


குறியாமல், இறைவனுடைய பொருள்சேர் புகழ்த்திறங்களைக் கற்றலும் கேட்டலும் முதலிய சிறப்பியல்புகளைக் குறிப்பனவாகும்.


22. விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் மேற்கொண்டு
உண்ணின் றுருக்கியோ ரொப்பிலா வானந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
(113)

அருபரத்து ஒருவன் அவனியிற் குருபரனாகி வந்து தமக்கு உபதேசித்தருளிய திறத்தினை உணர்த்துகின்றார்.

(இ-ள்) (அண்டத்திற்கு அப்பாலனாகிய இறைவன்,) பரமாகாயமாகிய பெருவெளியினின்றும் இறங்கி எளிவந்து (உயிர்களது) வினைப்பக்குவத்திற்கு ஏற்பக் குருவடிவம் கொண்டு, அருளாகிய தண்மை நிலை பெற்ற திருவடியை என் தலையின்மேற் பாதுகாவலாக முன்வைத்து (த் தீக்கை செய்து) எனது உள்ளத்திலும் புகுந்து நெஞ்சினையுருக்கி ஒப்பில்லாத பேரின்பத்தை விளைக்கும் சிவஞானமாகிய கண்ணினைக் காட்டி முன்னின்று காட்சிதந்து செம்பிற் களிம்பு போன்று அநாதியே என்னுயிரைப் பற்றியுள்ள ஆணவமலத் தொடர்பினை அறுத்து அருள் செய்தான். எ-று.

இறைவன் ஆசிரியத் திருமேனிகொண்டு வந்து திரு வடி சூட்டினான் என்பார் தலைக்காவல் ‘முன் வைத்து’ என்றார். அம்முதல்வனே உயிர்க்குயிராய் உள் நின்று உள்ளத்தையுருக்கினான் என்பார் ‘உள் நின்றுருக்கி’