பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

53


என்றார். “என்னை இப் பவத்திற் சேராவகையெடுத்து என் சித்தத்தே தன்னை வைத்து அருளினாலே தாளிணை தலைமேற் சூட்டும் ... மெய்கண்டான்” என அருணந்தி சிவாசாரியாரும், சிந்தையிலும் என்றன் சென்னியிலும் சேரும் வகை வந்தவனே எனத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனாரும் கூறும் அநுபவ மொழிகள், காண்டற் கரிய கடவுள் குருவின் வடிவில் எழுந்தருளிவந்து அருள் புரியுந் திறத்தைக் குறிப்பனவாகும். களிம்பு என்றது செம்பிற்களிம்பு போன்று உயிரை அநாதியே பற்றியுள்ள ஆணவமலத்தினக் குறித்தது; உவம ஆகுபெயர்.


23. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்
பதியினைப் போற்பசு பாசம் அநாதி
பதியினைச் சென்றணுகாப் பசுபாசம்
பதியணுகிற் பசுபாசம் நிலாவே. (115)

சைவசித்தாந்தம் கூறும் பதி பசுபாசம் என்னும் முப்பொருளியல்பினை விளக்குகின்றார்.

(இ-ள்) இறைவன், உயிர் , தளை எனச் சொல்லப்படும் முப்பொருள்களுள் பதியாகிய இறைவனைப் போலவே உயிரும் தளையும் தொன்மையுடையனவே. எனினும் பதியாகிய இறைவனை உயிரும் பாசமும் சென்று பற்ற வல்லன அல்ல. பதியாகிய இறைவன் (உயிர்கள்மேல் வைத்த கருணையால்) அணுகுவானாயின் உயிரினிடத்துப் பசுத்துவமும் ஏனைப்பாசமும் நில்லாது நீங்குவனவாம் எ-று.

பதி-இறைவன். பசு-உயிர். பாசம் என்பன, உயிரின் அறிவை அநாதியே மறைத்துள்ள ஆணவம் கன்மம் மாயை என்னும் மூவகைப் பிணிப்புக்கள். அநாதி-இன்ன காலத்தில் தோன்றின எனத் தோற்றம் சொல்ல முடியாத காலத்தன. பசு அறிவாகிய குறையுணர்வினாலும் பாசவறிவினாலும் தொடர வொண்ணாது