பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

75


கொண்டு அவனைக் கடந்து வெல்லுதலும் இயலுமோ? (இயலாது என்பதாம்.)

தேற்றுதல்-தெளிவித்தல். தெளிதல்-கலக்கம் நீங்கித் தெளிவுபெறுதல். கலக்கி மலக்குதல், ஒருபொருட் பன்மொழி மலக்குதல் கலக்கமடைதல். ஆற்றுப் பெருக்கின் - ஆற்றிற் பெருவெள்ளம் போன்று. ஆற்றிற் பெருவெள்ளம் தான் கலங்கியும் ஏனையவற்றைக் கலக்கியும் வருதல் இயல்பு. உங்கள் செல்வத்தை மறுத்து மாற்றிக் களைவீர் என இயைக்க. செல்வத்தை-செல்வத்திலுள்ள பற்றினை. குதித்தல்-தாண்டுதல்; கடத்தல், வெல்லுதல். ஆமே என்புழி ஏகாரம் எதிர்மறைப் பொருள் தந்தது. பொருளின் சார்பு கொண்டு இறப்பினே நீக்குதல் இயலாது என்பதாம். இனி, கூற்றங் குதித்தலும் கைகூடும் என்ற திருக்குறட் பொருளின்படி ஆமே என்புழி ஏகாரத்தைத் தேற்றே காரமாகக் கொண்டு, உங்கள் செல்வத்திற் கொண்டுள்ள பற்றினை அறவே மாற்றித் தெய்வமுண்டென்னுந் தெளிவுடையராய் அம் முழுமுதற் பொருளிடத்து அன்புடையீராயின் கூற்றுவனைக் கடத்தலும் எளிதில் இயல்வதேயாம் எனப் பொருளுரைத்தலும் பொருந்தும். செல்வத்தால் வரும் கலக்கத்திற்கு ஆற்றுப் பெருக்கினை இங்கு உவமை கூறியது கொண்டு,

‘ஆறிடுமேடு மடுவும் போலாஞ் செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து’

என விளக்குவர் ஒளவையார்.


38. வாழ்வு மனைவியும் மக்க ளுடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய்வார் கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே. (174)