13
(45-46) பாரினும் முற்பட்டதான குளிர்ந்த கடல் கலங்கும்படி உள்ளே புகுந்து சூரர்களின் முதல்வனான சூரபன்மனைக் கொன்ற—ஒளிவீசுகிற—இலைவடிவான நீண்ட வேலை (உடையவனும்).
அரக்கரொடு பொருத போர்க்களத்தில்
பேய் மகள் ஆடிய துணங்கைக் கூத்து
(47-56) உலர்ந்த மயிரினையும், வரிசை மாறிய பற்களையும், பிளந்த வாயினையும், சுழலும் கருவிழியுள்ள பசிய கண்களையும், அஞ்சத்தக்க பார்வையினையும், பிதுங்கிய கண்ணையுடைய கோட்டானோடு கொடிய பாம்பும் பொருந்தித் தொங்குவதனாலே பெரிய முலைகளை அலைக்கழிக்கின்ற காதுகளையும், சொர சொரப்பான வயிற்றினையும், நடுங்கச் செய்யும் நடையினையும் உடைய—கண்டார் அஞ்சத்தக்க பேய்ப் பெண்ணானவள், குருதி தோய்ந்த கூரிய நகத்தையுடைய கொடிய விரலாலே கண்னைத் தோண்டித் தின்ற மிக்க முடை நாற்றம் வீசும்கரிய (அரக்கர்) தலையை ஒள்ளிய தொடி அணிந்த கையிலே ஏந்திக் கொண்டும், அரக்கர் அஞ்சும்படி எதிர் நின்று (முருகன்) பொருத வெற்றிப் போர்க்களத்தைப் புகழ்ந்து பாடிக் கொண்டும். தோளைத் தூக்கியசைத்து நிணத்தைத் தின்னும் வாயை உடையவளாய்த் ‘துணங்கை’ என்னும் கூத்தை ஆடிக்கொண்டிருக்க,
(57-66) மக்கள்—விலங்கு ஆகிய இருபிரிவு வடிவம் அமைந்த ஒரு பெரிய அரக்க உடலை அறுத்து வேறு வேறு கூறாக்கும் வகையில் அஞ்சும்படி எதிர் சென்று, அரக்கரின் மிக்க வலிமை அடங்கும்படி, கவிழ்ந்த பூங்கொத்துக்களை