பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

(திருச்சீரலைவாய்)

முருகனின் யானை ஊர்தி

(78-82) கூரிய தோட்டி (அங்குசம்) குத்திய வடு ஆழ்ந்த புள்ளி பொருந்திய நெற்றியில் வாடாத பொன்னரி மாலை பட்டத்தோடு தொங்கி அசைய, தாழ்ந்து தொங்கும் மணிகள் இரண்டும் மாறி மாறி இரட்டை ஒலி செய்கின்ற இரு பக்கங்களையும் விரைந்த நடையினையும் எமனை ஒத்த—வெல்லுதற்கு அரிய வலிமையினையும் உடைய—காற்று எழுந்தாற்போல் விரைந்து செல்கிற களிற்று யானையின்மேல் எழுந்தருளி,

முருகன் திருமுகம்

(83- 90) ஐவகை வடிவுடன் செய்வேலைப்பாடு முதிர்ந்த முடியோடு திகழ்கிற-முரண்பட்ட ஒளி வீசும் அழகிய மணிகள் மின்னலை ஒத்த ஒளி விளக்கத்துடன் தலையில் பொலிவுதர, ஒளிவீசி அசைகிற-வேலைப்பாடு அமைந்த பொற்காதணிகள், நெடுந்தொலைவு விளங்கித் தோன்றும் இயல்புடைய ஒளிவிடும் திங்களைச் சூழ்ந்த நீங்காத விண்மீன்கள் போன்று திகழ்வனவாய் ஒளிவீச, குற்றமற்ற குறிக்கோளுடன் தம் தவத்தொழிலை முடிக்கும் தவத்தோரின் உள்ளத்தில் எதிர்ப்பட்டு எழுந்து தோன்றுகிற நல்லொளியும் செந்நிறமும் மிக்க ஆறு முகங்களுள் ,

ஆறு முகங்களின் அருஞ் செயல்கள்

(91 - 102) ஒருமுகம், இருள் சூழ்ந்த பெரிய உலகம் களங்கம் அற்றுத் திகழப் பல்வேறு கதிர்களை விரித்து வீசிக் கொண்டிருக்கிறது; மற்றொரு முகம், அன்பர்கள் போற்ற விரும்பி இனிது விளங்கி, அன்பர்மேல் உள்ள ஆராக் காத