19
லால் மகிழ்ந்து அவர் வேண்டும் வரங்களை அளிக்கின்றது; மூன்றாவது முகம், மந்திர விதிப்படி மரபு முறை தவறாது செய்கின்ற அந்தணர்தம் வேள்வியைக் (யாகத்தைக்) கருத்திற் கொண்டு காத்தோம்பும்; வேறொருமுகம், எவராலும் உணர்த்த முடியாமல் எஞ்சிய மெய்ப்பொருள்களை இன்பம் மிக நாட்டங் கொண்டு திங்களைப் போல எல்லாத் திசைகளிலும் விளக்கிக் கொண்டிருக்கும்; இன்னொருமுகம், பகையரக்கர்களை அழித்து, மேற்சென்ற போர்முனையை நொறுக்கி, சினங்கொண்ட நெஞ்சோடு களவேள்வியைச் செய்யும்; ஆறாவது முகமோ, குறவரின் இளமகளாகிய—கொடிபோன்ற இடுப்பினையுடைய மடப்பம் மிக்க வள்ளியொடு நகைத்து மகிழும்.
(103-106) அவ்வாறாக அந்த ஆறு முகங்களும் முறையுடன் பயின்று அச்செயல்களைப் புரிந்தொழுகுவதால் அவற்றிற்கேற்ப, — மாலை தாழ்ந்து .தொங்கும் அழகிய மார்பிலிருந்து தொடங்கியுள்ள சிவந்த மூன்று அழகு வரிக் கோடுகளைத் (தோள்வரையும்) பெற்றுள்ள—வலிமையுடைய—சுடர்விட்டு வளவிய புகழ் நிறைந்து வளைந்து நீட்டி இயங்குகிற நிமிர்ந்த தோள்களுடன் கூடிய பன்னிரு திருக்கைகளுள்,
(107–118)
[முதல் இரட்டைக் கைகள்]
(107-108) விண்ணில் இயங்கும் இயல்புடைய தேவர்களைக் காக்க ஏந்திய நிலையில் உள்ளது ஒருகை; (அதற்கு இணையாக) இடுப்பில் ஊன்றியுள்ளது மற்றொருகை.