பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21



[இரண்டாவது இரட்டை.]

(109-110) அழகு மிக்க ஆடையணிந்துள்ள துடையின் மேலே தொங்கவிட்டிருப்பது ஒருகை; (ஊர்ந்துசெல்லும் பானையைச்) செலுத்துவதற்காகத் தோட்டி (அங்குசம்) பிடித்திருப்பது ஒருகை.

[மூன்றாம் இரட்டை]

(110-111) அடுத்த இரட்டைக் கைகளுள், அழகிய பெரிய கேடயத்தை ஏந்தி நிற்க ஒருகை; வேலை வலமாகச் சுழற்ற மற்றொரு கை.

[நான்காம் இணை]

(111-113) ஒருகை மார்போடு பொருந்தித் திகழ; மற்றொன்று மாலையுடன் விளங்க;

[ஐந்தாவது இணை]

(113-115) ஒருகை கீழ்நோக்கித் தொங்கும் தொடி என்னும் அணியுடன் மேல் நோக்கிச் சுழல; வேறொன்று, ஓசை இனிமையுடன் ஒலிக்கின்ற மணியை மாறி மாறி இரட்டித்து ஒலியெழச் செய்ய;

[ஆறாவது இணை]

(115-118) ஒரு கை நீல நிற விண்ணிலிருந்து மிகுந்த மழைத் துளியைப் பெய்விக்க; இன்னொரு கை வானத்துத் தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட, -அப்படியாக அந்தப் பன்னிரு கைகளையும் முறையுடன் தொழிற்படுத்தி,

அலைவாய் அடைதல்

(119-125) வானப் பல்லியம் (தேவதுந்துபி) முழங்கவும், திண்ணிய வயிரம் பாய்ந்த கொம்பு என்னும் இசைக்