பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பேராசிரியர் சுந்தர சண்முகனார்

தோற்றமும் கல்வியும்:

கடலூரையடுத்த புது வண்டிப்பாளையத்தில் 13-7-1922இல் திரு சுந்தரம் - அன்னபூரணி இவர்களின் மகனாகப் பிறந்தவர். பள்ளிக் கல்விக்குப்பின், திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் சிவத்திருஞானியார் அடிகளிடம் தமிழ் பயின்றவர் பின் திருவையாறு அரசர் கல்லூரியில் வித்துவான் பயின்றவர்.

பணியாற்றிய பதவிகளும், நிறுவனங்களும்:

1. 1940-46 விரிவுரையாளர், துணை முதல்வர், சிவஞான பாலய அடிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம்.

2. 1949-58 தமிழ்த் துறைத்தலைவர், பெத்தி செமினார் மெட்ரிக்குலேஷன் ஆங்கில பிரஞ்சுக் கல்விக் கூடம், புதுச்சேரி.

3. 1958-80 தமிழ்த்துறைத் தலைவர், அரசினர் ஆசிரியர் பயிற்சி மையம், புதுச்சேரி.

4. 1982-83 பேராசிரியர், தொகுப்பியல் துறைத்தலைவர். தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

5. வாழ்நாள் உறுப்பினர், கல்விக்குழு, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

69 படைப்புகள் (தொகுப்பாக)
1. சிறுகதை நூல் 1 14. குடும்ப நூல் 1
2. புதினங்கள் 2 15. வாழ்வியல் 1
3. கவிதை நூல்கள் 8 16. பாலியல் 1
4. காப்பியங்கள் 2 17. கல்வி இயல் 1
5. திருக்குறள் ஆய்வுகள் 5 18. பொருளியல் 1
6. கம்பராமாயணத் திறனாய்வுகள் 6 19. அகராதியியல் 1
7. சிலப்பதிகாரத் திறனாய்வு 1 20. வானியல் 1
8. அறிவியல் ஆய்வுகள் 6 21. பண்பாட்டு இயல் 2
9. இலக்கண ஆய்வுகள் 2 22. தரை நூல் 1
10. மொழியியல் ஆய்வுகள் 3 23. ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள் 6
11. தொகுப்பியல் ஆய்வுகள் 2 24. உலக ஒருமைப்பாட்டு நூல் 1
12. முழு உரை நூல்கள் 7 25. திருப்பதி கோயில் ஆய்வு 1
13. வரலாற்று நூல்கள் 4