பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


மற்றைத் தேவர்களும் வந்து காணல்

(166-174) பகல் ஒளிபோல் தோன்றும் மாறுபாடு அற்ற ஒளிக்காட்சியினையுடைய- (ஆதித்தர் பன்னிருவர்+உருத்திரர் பதினொருவர்+வசுக்கள் எண்மர் + அசுவினி தேவர் என்னும் மருத்துவர் இருவர் ஆகிய) நான்கு வகையான வேறுபட்ட இயல்புடைய தேவர் முப்பத்து மூவரும், (பதினொரு மூவர் =11 x 3 =33 , (ஒன்பதை இரண்டால் பெருக்கிய) பதினெட்டு வகையான உயர்நிலை பெற்ற தெய்வ இனத்த வரும். விண்மீன்கள் பொலிந்திருப்பது போன்ற தோற்றத்தினராயும், விண்மீன்களைச் சார்ந்து காற்று எழுச்சியுற்றது போன்ற விரைந்த நடையினராயும், காற்றிலிருந்து நெருப்பு எழுந்தாற் போன்ற வலிமை யுடையவராயும், நெருப்புப் பிழம்பு தோன்ற இடி இடித்தாற் போன்ற உரத்த குரல் உடையவராயும், தமக்கு உற்ற துன்பமான குறைபாடுகளினின்றும் தாம் விடுதலை பெறும் வழிமுறையினைத் தேடிக் கொள்பவராயும் அமைந்து வான் வழியே சுழன்று வந்து முருகனை) ஒருசேரக் கண்டு வணங்கி நிற்கவும்,

ஆவினன்குடி அமர்தல்

( 175- 176) குற்ற மற்ற கற்பு கொண்ட மடந்தையாகிய தெய்வயானையுடன் சில நாள் (பழநி எனப்படும்) திருவாவினன் குடி என்னும் திருப்பதியில் அமர்ந்திருத்தலையும் முருகன் உரிமையாக உடையவன். அத்திருவாவினன் குடி அல்லாமலும்,-

[திருவேரகம்]

அந்தணர் வழிபடும் திரு ஏரகம்

( 177-189) (ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட் பித்தல், ஈதல், ஏற்றல் என்னும்) அறுவகையாய் உள்ள