பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

நீண்ட மூங்கில் குழாயில் ஊற்றிப் பதப்படுத்திய தேனால் ஆன கள்ளின் தெளிவை, மலைப்பகுதியிலுள்ள சிற்றூரில் வாழும் சுற்றத்தாருடன் மகிழ்ந்து உண்டு, தொண்டகம் என்னும் சிறுபறையின் ஒலிக்கு ஏற்பக் குரவை என்னும் கூத்தை ஆட,

மலையக மகளிரின் அணிவகை

(198-205) விரலால் கிண்டியதால் மலர்ந்த தனி வேறான நறுமணம் உடைய—ஆழமான சுனைகளில் மலர்ந்த வண்டு மொய்க்கும் மலர்களால் தொடுத்த கண்ணி என்னும் ஒருவகை மாலையினையும் இணைப்பான கோதை என்னும் வகை மாலையினையும் சேர்த்து அணிந்த கூந்தலுடன், கட்டிய கஞ்சங் குல்லையொடு, மராமரத்தின் இலையொடு கூடிய நறிய மலர்களின் சிவந்த காம்புகளைக் கொண்ட வெள்ளிய பூங்கொத்துக்களை இடையிடையே இட்டு வண்டுகள் தேன் அருந்தும்படித் தொடுத்துச் செய்த பெரிய குளிர்ந்த சிறந்த தழை உடையைத் திருத்தமான மணிவடம் அணிந்த அல்குலிலே அசையும் படி உடுத்து, மயிலைக் கண்டாற்போன்று தோன்றும் மட நடையையுடைய மலைப்பகுதி மகளிருடன் (கூடி) ,

வெறியாடும் வேலன் உருவத்திலே

குடிகொண்டுள்ள குமரன் இயல்பு

(206-217) செம்மேனியனாய், செந்நிற ஆடையனாய், சிவந்த அடிமரத்தையுடைய -அசோகினது குளிர்ந்த தளிர் அசைந்தாடும் காதுகளை உடையவனாய், கச்சு கட்டினவனாய், வீரக் கழல் பூண்டவனாய், வெட்சி மாலை சூடினவனாய், குழல் இசைப்பவனாய், கொம்பு ஊதுபவனாய், சிறிய பல இசைக் கருவிகளை இசைப்பவனாய், ஆட்டுக் கிடாயும் மயிலும் ஊர்தி