உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 84) 94 [பிரசவ ஆஸ்பத்திரி 44 (வாட்ச்மேன் கூண்டில், பத்திரிகையுடன் வாட்ச்மேன் உட்கார்ந்திருக்கிறான். பரந்தாமனின் விளம்பரம் கண்ணில்படல்] அன்புள்ள குமுதாவுக்கு" (ஆர்வமாய்) என்னாது ! என்னாது! நம்ப குமுதா பேரு வருது ! (மீண்டும்) அன்புள்ள குமுதா வுக்கு...(பிறகு முணகல்) (உரக்க) இப்படிக்கு உன் மாமன் பரந்தாமன், 15, இமாலயா ஹோட்டல், சென்ணை...ஆகா, குமுதாவோட கவலையெல்லாம் ஒழிஞ்சிடும்! இப்பவே எழுதுகிறேன் குமுதா விலாசத்தை. (கார்டைத் தேடி) எங்கடா கார்டு ! இதுவேற....ம்.... (எடுத்து எழுதுகிறான். எழுதி முடிக்கும்போது அந்தப் பக்கம் பாண்டியன் வருதல்) வாட்ச்மேன்: (பாண்டியனைப் பார்த்து) தம்பீ! கொஞ்சம் நில் லேன் ! (அருகே வந்து) இந்தப் பக்கம்தானே போறே? பாண்டியன்: ஆமாம். வாட்ச்மேன்: உம். இந்தக் கார்டை கொஞ்சம் தபால் பெட்டி யிலே போட்டுட்டு போய்டேன். (பாண்டியன் வாங்குதல்) ரொம்ப அவசரம் எனக்கு ஆஸ்பத்திரி நேரம். வெளியே போகக்கூடாது | போட்டுர்ரீயா? பாண்டியன்: ம்.. காட்சி 85] (வாங்கிக்கொண்டு போகிறான்)

[தெரு (கார்டை எடுத்துச் சென்ற பாண்டியன் தெரு மூலையி லுள்ள பெட்டியில் போடும்போது தவறி கீழே விழுகிறது. அதில் விலாசம் தெரிகிறது] பரந்தாமன், 15, இமாலயா ஹோட்டல், சென்னை.