99 பரந்தாமன் : இல்லை பாமா இல்லை. அவளிடம் மன்னிப்புக் கேட்க வந்தேன். எதிர்பாராதவிதமாக உன்னையும் கண் டேன். பாமா நீயும் நடந்தவைகளை மறந்துவிடு ! மீண்டும். நம் வாழ்வைப் புதுமை செய்வோம். பாமா : வாழ்வு எனக்கா? நான் முறிந்துபோன பால்! விஷங் கலந்த தேன் ! எனக்கா வாழ்வு ! சதிகாரா ! போதுமடா உன் உபதேசம்! போதும். (ரிவால்வாரை நீட்டி) பரந்தாமன் : பாமா! பாமா : உலகத்திலே இருக்கிற என்போன்ற பேதைகளைக் காப் பாற்றுவதற்காக உன்னைக் கொல்லுகிறேன் ! (சுடப்போகிறாள்) பரந்தாமன்: பாமா! (தடுக்கிறான் - இருவருடைய போராட் டத்தில்) பாமா! நான் சொல்வதைக் கேள் ! என்னைக் கொல்லாதே ! நான் உண்மையிலேயே திருந்திவிட்டேன்... பாமா : பாவி ! விடு என்னை ! 53 ("குமுதா! குமுதா என்ற பூமாலையின் ஒலி கேட் கிறது ! அதற்குள் பாமாவின் ரிவால்வார் வெடிக் கிறது. ரிவால்வார் அவள் பக்கமே திரும்பி யிருந்ததால் பாமாவின் உயிர் போகிறது. பாமா விழுகிறாள்.) பரந்தாமன் : ஆ !...(கவலை) (அதே சமயம் அவன் மார்பில் குண்டுவீச்சு, பரந்தாமன் : ஆ!... (அலறல்) (துடித்தபடி சோபாவில் விழுகிறான். இப்போது சுட் டது பூமாலை) பூமாலை தொலைந்துபோ துஷ்டனே / இனிமேலாவது உலகம் நிம்மதியாயிருக்கட்டும் ! (கீழே கிடப்பவளிடம்) குமுதா ! குமுதா / (அருகே போய் பார்க்கிறாள்) ஆ/ பாமா !
பக்கம்:திரும்பிப்பார்.pdf/107
தோற்றம்