102 பாண்டியன்: பல்லைக்காட்டி ஏமாற்ற நீனைக்காதீர் மறுபடியும்! இம்முறை இரண்டிலொன்று. அநியாயமாக நீக்கப்பட்ட தொழிலாளருக்கு வேலைதரவேண்டும் உடனடியாக. முதலாளி: பாண்டியன்! பாண்டியன்: யாரோ ஒருவன் செய்த தவறுக்காக இத்தனை குடும்பங்கள் மீது பழிவாங்கிக்கொள்வதுதான் மனிதத் தன்மையா? முதலாளி: நான் அதை உணர்கிறேன் பாண்டியன் ! பாண்டியன்: உணர்ந்தால் போதாது. உடனடியாக பரிகாரம் தேட வேண்டும். முதலாளி: பாண்டியன் / தொழிலாளிகளை வேலைக்கு சேர்ப்பது மட்டுமல்ல. குற்றமற்ற உனக்கு நான் செய்த கொடுமைக் காக சிவசக்தி மில் நிர்வாகமே உன் கொள்கைப்படியும் உஷாவின் கொள்கைப்படியும் நடக்க அனுமதி தருகிறேன். (பாட்டாளிகளைக் காட்டி-இதோ மில்லின் சொந்தக் காரர்கள் ! உன் தோழர்கள்! கைபோட்டுக் கொடுத்து - இதோ மில்லின் நிர்வாகம் !) பாண்டியன்: அப்படியா ! வாழ்க உங்கள் புகழ்! வளர்க இந்த பண்பு! தோழர்களே! சிவசக்தி மில் இன்று முதல் ஜன சக்தி மில்லாக மாறும்! சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக் கேற்ற வசதி. சமத்துவம் கொழிக்கும்-சமதர்மம் திகமும்- சமூதாய மறுமலர்ச்சி உருவாகும்! தொழிலாளர்கள் பாண்டியன் வாழ்க! பாண்டியன் வாழ்க ! (வேலைக்காரன் ஓடிவந்தபடி) வேளைக்காரன்: எஜமான் பாத்திங்களா? முதலாளி: ஆ! என்ன | (பத்திரிகையை பாண்டியனிடம் கொடுத்தல்)
பக்கம்:திரும்பிப்பார்.pdf/110
தோற்றம்