காட்சி 47 4 [பூமாலைவீடு ஹால் [சாப்பிட்டான கப் சாசர்களை ஒரு பெண் எடுத்துப் போகிறாள்] குணரத்தனம்: அப்ப சந்தோஷம். ஏழாந்தேதி ஒரு நல்ல நாள் இருக்கு POO BEO 830 பூமாலை: நாள் எதா இருந்தா என்ன ! குணரத்தனம் : இல்லம்மா ! எனக்கு நாள் கொஞ்சம் நம்பிக்கை. பூமாலை : சரி சரி...... அதனால் என்ன ! தங்கம்:- நீ ஏம்மா கல்யாணம் பண்ணிக்காம ... நக்ஷத்திரத்திலே பூமாலை: இந்தக் குடும்பத்து பொறுப்பாளியே நான்தானே. தம்பி செல்வமாக வளர்ந்தவன், குடும்ப கஷ்டத்தை அவ னுக்கு கொடுக்கக் கூடாதுன்னு அப்பா அம்மா உத்தரவு. அக்கா மகள், தாய் தந்தை இல்லாதவள் சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறாள், அவளுக்கு நான்தான் துணை. குணரத்தனம்: இப்படி எல்லோருக்கும் அம்மா துணையா இருக்கிற தாலதான் அவங்க வாழ்க்கைத் துணைவரை வீட்டோட இருக்கிறவரா பாக்கிறாங்க ! ........ தங்கம் : ஏம்பா....அது மாதிரி புருஷன் கிடைக்காது .... லக்ஷிமி மாதிரி இருக்குது பொண்ணு ! ... (பரந்தாமன் வருகிறான் குளித்து டிரஸ் செய்துகொண்டு) பூமாலை: வா தம்பி / இவங்கள்ளாம் தெரியுமா? (பரந்தாமன் முழித்தல்) ஓ ! இவுங்க பெண்ணைமாத்திரந்தான் தெரி யும் போலிருக்கு பாமாவோட பெற்றோர்!. ... பரந்தாமன்: ஓகோ ! நமஸ்காரம்! பூமாலை: கல்யாணம் நிச்சயம் பண்ண வந்திருக்காங்க!என்ன சம்மதந்தானே உனக்கு 480 (பரந்தாமன் மௌனம், நாணம்)
பக்கம்:திரும்பிப்பார்.pdf/12
தோற்றம்