7 கருடன் : ஸ்... சும்மா யிரு ! அப்புறம் கம்பி எண்ணனும்... நல்ல வேலை செஞ்ச... (என்று ரிவால்வாரை வாங்கி டிராயரில் வைத்து மூடி விட்டு பையனிடம்) ஏ பையா / சூடா ஒரு கப் காபி கொண்டாந்து கொடு. பரந்தாமன் : விடக்கூடாது... (பையன் போதல்) கருடன்: (கம்பீரமாய்) ஆமாம் விடக்கூடாது! பரந்தாமன் : ஏய் நான் அடிபட்டதை வெளியில் விடக்கூடாது! கருடன்: அது சரி... நான் அப்பவே சொன்னேன். பிறத்தியான் எழுதினதை உன் பேரால் போடவேண்டாமென்று - இப்ப பஞ்சணை புத்தகம் எழுதியிருக்கே ! அதுக்கு இருக்கிற மதிப்பு... இல்லற ஜோதிக்கு இருக்குதா? ஏன் வீண் வம்பு அநாவசியமா அடாடா...பஞ்சணையைப்பத்தி லெட்டர் கள் வந்திருக்கு...யார் அந்தத் துறவி என்பவர். அவரைப் பார்க்க முடியுமா? போட்டோ இருக்கா? அவர் வரகவியா, சுய கவியா ? அவர் கையிலே பேனா இருக்கிறதா, மன்மத னின் வில்லே இருக்கிறதா?.பேனாவிலே மை இருக்கிறதா, அல்லது கருப்பஞ் சாறே இருக்கிறதா? இப்படியெல்லாம் உன்னை வர்ணிக்கிறார்கள். இல்லற ஜோதியை அப்படி
ே
வர்ணிக்கவும் இல்லை. அது நிறைய விக்கவும் இல்லை. பரந்தாமன் : வியாபாரமாகாவிட்டாலும், இல்லற ஜோதி எனக்கு ஒரு இன்பமான ஜோடியை அளித்திருக்கிறது. காட்சி 6]
[குளக்கரையோரமுள்ள தென்னஞ்சோலை-பகல் (பாமா பாடிமுடிந்ததும் குடத்தை எடுத்துக்கொண்டு போகிறாள் - மரத்தின் மேலே இருந்த பரந்தாமன் குடத்தின் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுக் கிறான். பாமா மேலே பார்த்து-]