உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 (போகிறார். பூமாலை சோர்ந்து சோபாவில் உட்காருகிறாள். பரந்தாமன் வந்து கீழே கிடக்கும் நகைகளைப் பார்த்து) பரந்தாமன் : அக்கா. இது ஏது நகை? (பூமாலை மௌனம்) பரந்தாமன் : ஏன் இப்படிக் கீழே கிடக்கிறது. (எடுக்கிறான்) எல்லாம் பொன்னகைதானே? பூமாலை: இல்லை. துரோகத்தின் புன்னகை ! பரந்தாமன்: (புரியாதவன்போல) என்னடா இது ! என்னக்கா விஷயம் !... வேடன் பூமாலை: மான் தோலிலே வேங்கை அதிக நாள் வாழமுடியாது பரந்தாமா ! அதையும் வேட்டையாட ஒரு வந்துவிடுவான். ஊர்ப் பெண்களிடம் விளையாடுகிறவர்களை உயிரோடு விடுவதில்லை மக்கள் !...அதை ஞாபகம் வைத்துக் கொள்! பரந்தாமன்: எப்போது வீட்டுக்கு வந்தாலும் இந்த ஒப்பாரி தானா ? மனிதன் நிம்மதியா வாழவே முடியாது போலிருக் கிறது! பூமாலை: மனிதன் தான் மாத்திரம் வாழக்கூடாது. வரையும் வாழவிடவேண்டும் ! பரந்தாமன் : சரி போதும் போதும். மற்ற காவியாடை கட்டிக் கொண்டு எங்கேயாவது தொலைய வேண்டியதுதான். பூமாலை: ஏன் ! அந்தத் திரைமறைவிலே சுலபமாக ஏமாற்ற முடியுமென்று கருதுகிறாயா? பெண் இனத்தை மண் ணில் நெளியும் புழுக் கூட்டமாக மதித்துவிட்ட பித்தனே! எங்கு போனாள் பாமா? சொல். எங்கே அவளைத் தவிக்கவிட்டாய்? எரிமலைமீது விளையாட வந்த அந்த ஏழைச் சிறுமியின் கதி என்னவாயிற்று. சொல் ! சொல்ல மாட்டாயா பாவி ! எங்கே பாமா ? பரந்தாமன்: பரலோகத்தில் போய் தேடிப்பார் ! (போய்விடுகிறான்)