உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 கருடன்: கொடுக்கிற காசை வாங்கிக்கிலேன்னா, இந்தப் பசங் களை யெல்லாம் இப்படித் தான் உதைக்கணும். (ஆபீஸ் பையனைப் பார்த்தல் - வாய் பொத்தி நிற்கிறான்) பரந்தாமன்: பாட்டாளியின் குரல்! கருடா! பேரு நல்லா அமஞ்சு போச்சில்ல. (புத்தகத்தை புரட்டியபடி) கருடன்: பேரு மட்டுமா / இரண்டு நாள்ள 5000 காப்பி வித்திருக்கு / அப்றம் என்ன? (பரந்தாமன் சிகரெட் பற்ற வைக்கிறான். மேசையில் "பாட்டாளியின் குரல்' இருக்கிறது. புண்யகோடி வருகிறான்). கருடன்: யார் நீங்க! புண்யகோடி : தெரியலியா என்னை. நான்தான் தொழிளாளர் தலைவன். நான் ஏன் வந்திருக்கேன் தெரியுமில்ல.... கருடன்: என்னாங்க.... (கருடன் பரந்தாமன் விழித்தல்) புண்யகோடி : தொழிலாளி சம்பளம் ஜாஸ்தியா கேட்டா. அதை சிந்திச்சு பார்க்க... கருடன் : இல்லிங்க, அவன் சம்பளம் கேக்கிலே. இந்த பேப்பர் பேலை தூக்கிட்டு வந்தான்... புண்யகோடி: அது இல்லிங்க! நான் மில் தொழிலாளியை சொல்கிறேன். கருடன்: ஆமாம் ஆமாம். தொழிலாளிகள் பிரச்சினையை கவ னிக்காத முதலாளிகளை சும்மாவிடக்கூடாது. பரந்தாமன்: கருடா! வாயால் கத்தி பயன் என்ன? பாட் டாளிகளின் குரல் பலம் பெறவேண்டுமானால், கிளர்ச்சி நடத்தவேண்டும்... புண்யகோடி : அப்படிச் சொல்லுங்க... பெரிய