உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பரந்தாமன்: தலைவர் அவர்களே ! (ஜனங்கள் சிரிப்பது) ஓகோ, நான்தான் தலைவரோ. மன்னிக்கவும். காடு வெட்டி கழனி திருத்தி காலையிலே மாடோட்டி கலப்பை யெடுத்துச் சென் றால் மாலையிலே வீடுதிரும்பும் மனமொடிந்த பாட்டாளியும், ரத்தத்தை வியர்வைக்குளமாக்கி, சித்தம்சோர்ந்து நித்த நித் தம் உழைக்கும் பஞ்சாலைத் தொழிலாளியும், புத்தம் புதிய வாழ்வு பெறவேண்டுமென்பதே என் நோக்கம்... ஏழைகள் பசி என்று கூறினால் என் இருதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது. அவர்கள் கண்ணீர்விட்டால் என் ரத்த மெல்லாம் கொதிக்கிறது. நம் கோரிக்கைகளை ஏற்க மறுக் கும் அவர்களின் கொட்டமடக்க- உடனே வேலைநிறுத்தம். ஒட்டுமொத்தக் கூட்டாகப் புறப்பட வேண்டும் ! வெற்றி நமதே! வெற்றி நமதே ! (கரகோஷம், புண்யகோடிக்கு ஒரே பூரிப்பு) காட்சி 34] சொல்லு. [பூமாலை பிள்ளைகளுடன்!] இருவரைச் பூமாலை: ஜீவஹிம்சை கூடாதென்றவர்கள் பையன் : புத்தர், காந்தி. பூமாலை: முகுந்தா ! மூவேந்தர் யார்? பையன் : சேரன், சோழன்.... (திணறுவது) பூமாலை: உம். சொல்லு........ பாண்டியன்... (பாண்டியன் என்றதும் அவள் முகம் மாறுகிறது - உதடுகள் முணுமுணுக்கின்றன. பிறகு மாணவ- மாணவிகளிடம்) பூமாலை : சரி வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வாங்க.... .....S (எல்லோரையும் அனுப்புகிறாள். அவர்கள் போனதும், தோட்டத்துப் பக்கம் போகிறாள்)